பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் 191

தாப்பிசைப் பொருள்கோளாகும். நிரல்நிறை யென்ப தும் ஒரு பொருள்கோளே. தன் மேம்பாட்டுரையென்னும் அலங்காரம் நெடுமொழி வஞ்சியென்னும் புறத்துறையில் பயின்று வரும், விரோதம் என்பது முரண்தொடையாம். இவ்வாறு பொருள்கோள், தொடை என்பனவும் அலங் காரமாதலைநோக்கி மாறனலங்காரத்தார் பூட்டுவில்,இணை யெதுகை என்பவற்றையும் அலங்காரமாக அமைத்தனர்.

தற்குறிப்பேற்றவணி கவிஞனது கற்பனைத் திற னைக் காட்டவல்லது. தொடர்நிலைச் செய்யுட்கண் இக் கற்பனை கதைத் தொடர்பேர்டு வருங்கால் மிக்க இன்பம் பயக்கும். கற்பனை யென்று அறிஞர் கூறுவது பெரும் பாலும் தற்குறிப்பேற்ற அணியையே ஆகும்.

பாவிகம்

தன்மை முதலிய பொருள் அணிகளும், மடக்கு முதலிய சொல்லணிகளும் காப்பியங்கள் அல்லாத பிற செய்யுட்களிலும் காணப்படும். பொது வகையில்ை செய்யுட்களில் அமையும் அணிகளையன்றிச் சிறப்பு வகையால் காப்பியங்களுக்கே உரியதாக ஓர் அணி சொல்லப்படுகின்றது. அது பாவிகம் என்பது.

பாலிகமது நற்கவியின்

ஒண்பொருளின்ருெடர் காப்பியம்

முற்றின் உரைபெறுமால்'

(வீர. அலங்காரம். 35)

'பாவிகம் என்பது முழுக் காப்பியமும் ஒருங்கு பொருந்திய குணமாம்...பாவிகம் காப்பியத் தன்மை யாதலின் தனிச் செய்யுளால் எடுத்துக் காட்டு அமைவதன்று." - (டிை உரை.)