பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

தமிழ்க் காப்பியங்கள்

'பாவிகம் என்பது காப்பியப் பண்பே."

(தண்டி. 99)

பாவிகம் என்று சொல்லப்படுவது பொருட்டொடர் நிலச் செய்யுட் டிறத்துக் கவியாற் கருதிச் சொல் லப்படுவதொரு குணம். அஃது அத் தொடர்நிலைச் செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவ

தல்லது தனித்து ஒரு பாட்டால் நோக்கிக் கொள்

ளப் புலப்படாதது. - (டிெ. உரை.) 'விளம்பிய காப்பியக் குணங்கள்பா விகமே." -

- (மாறன், 251.): விளம்பிய காப்பியக் குணங்களென்பன முன்னர்ப் பொதுவியலுட் கூறிய காப்பியக் குணங்கள்.குண மாவன அப்பொருட்டொடர்நிலை முழுவது உம் நோக்கிக் கொள்ளப்படுவதல்லது தனித்து ஒரு பாட்டாற் கொள்ளப்படாதெனக் கொள்க."

(டிெ. உரை.)

മുഖ பாவிகத்தைப்பற்றி இலக்கண நூல்களால்

அறியப்படும் இலக்கணங்கள். வீரசோழிய உரையாசிரி யரும் தண்டியலங்கார உரையாசிரியரும்,

பிறனில் விழைவோர் கிளையொடும் கெடுக

பொறையிற் சிறந்த கவசம் இல்லை வாய்மையிற் கடியதோர் வாளி இல்லை"

என்பதை உதாரணமாகக் காட்டுகின்றனர். மாறனலங் கார உரையாசிரியர் பல குறட்பாக்களை எடுத்துக்காட்டி, "இவை போல்வனவாகிய பொருட்பால் காமத்துப் பால் களுள் வரும் குணங்களும் பிற காப்பியங்களுள் வரும் குணங்களும் காப்பியக் குணங்கள மென்று கொள்க’ என்று உரைத்தார்.