பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் 193

இவற்ருல், கவிஞன் தான் மேற்கொண்ட் காப்பி யத்தில் பலபடியாக வற்புறுத்தி அமைக்கும் அறிவுரை களே காப்பியக் குணங்களென்று தோன்றுகின்றது. கவிஞன் தன் உள்ளக் குறிப்பில் எந்தச் சிறந்த கருத்தைக் கதை வாயிலாக உருப்படுத்திக் காட்ட விரும்புகிருனே அந்தக் கருத்தையே பாவிகமென்று சொல்லலாம். கவிஞனுடைய மனுேபாவம் பாவிகம்; அதை அமைத்த பாவ சித்திரம் காப்பியம். சிலப்பதி காரத்தின் பதிகத்தில், -

"அாைசியல் பிழைத்தோர்க் கறங்கூறி ருவது உம்

உரைசால் பத்தினிக் குயர்த்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதுாஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்ற அடிகளிலே கூறப்பட்ட அரைசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்ருவது முதலிய மூன்றும் கவிஞன் கருதிய கருத்தெனத் தெரிதலின், அவற்றைச் சிலப்பதி காரமாகிய காப்பியத்தில் அமைந்துள்ள பாவிகமென்று. கொள்ளவேண்டும். அடியார்க்குநல்லார் அம்மூன் றையும் உள்ளுறை என்று குறிக்கின்ருர்,

அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பெரும் பொருளுக்குள் இப் பாவிகம் அடங்குமாயினும், அந் நான்கும் பல பகுதியாக விரிந்துள்ளன. அவற்றுள் சிறப்பாகச் சிலவற்றையே கவிஞன் தன் காப்பியத்துக்கு உள்ளுறையாக வைத்துப் பாடுவாளுதலின் அச் சிலவே பாவிகமாகக் கருதப்பெறும். -

சிலப்பதிகாரத்தின் பாவிகம் வெளிப்படைய:கப் பதிகத்திற் சொல்லப்பட்டது போலப் பிற நூல்களிற் சொல்லப்படாவிடினும், அந் நூல்களின் போக்கிலே

த. கா.-13