பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் 195

'காட்சிப் பொருளாவன ஐம்பொறி யுணர்வுக்கு உட்பட்டவை. கருத்துப் பொருளாவன மனனுணர் வால் அறியப்படுவன. தம் செய்யுளைப் படிப்பவர் களுடைய அகக் கண்ணின் முன் இவ் விருவகைப் பொருள்களையும் தோற்றச் செய்யும் ஆற்றல் சங்க காலத்துப் பெருங் கவிஞர்கள்பாற் குறைவற நிரம்பியிருந்தது' -

என்பதும் காண்க.

சொல் அணிகள்

அலங்கார நூல்களிற் சொல்லணிகள் சொல்லப்படு கின்றன. காப்பியங்களில் இவை சிறுபான்மை வந்துள்ள்ன. - -

சித்திர கவிகளின் இலக்கணத்தையும் இச் சொல்லணி இலக்கணத்தோடு சேர்த்து உரைப்பர். காஞ்சிப்புராணத்திலும் மீனுட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருநாகைக் காரோண புராணம், அம்பர்ப் புராணம் என்பவற்றிலும் சித்திர கவிகளைக் காணலாம்.

வீரசோழிய நூலாசிரியர் மாலை மாற்று, சக்கரம், ஓரினப் பாட்டு, ஒரெழுத்துப் பாட்டு, வினவுத்தரம், ஏகபாதம், காதை கரப்பு, சுழிகுளம், சித்திரப் பா, கோமூத்திரி என்னும் பத்தைக் கூறினர். யாப்பருங்கல நூலார் மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழு கூற்றிருக்கை, காதை கரப்பு, கரந்துறை பாட்டு, தூசங் கொளல், வர்வல்நாற்றி, கூட சதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்துப் பாட்டு, ஓரினப்பாட்டு, பாதமயக்கு, பாவின் புணர்ப்பு, ஒற்றுப்பெயர்த்தல், ஒரு பொருட் பாட்டு,

1. குறுந்தொகை, முதற்பதிப்பு. நூல்ராய்ச்சி, ப. 18. 2. வீரசோழியம், சூ. 179.