பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தமிழ்க் காப்பியங்கள்

சித்திரக்கா, விசித்திரக்கா, வினவுத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்து வருத்தனம் என்னும் இருபத்திரண் டைக் கூறுவர். அந் நூலின் உரையாசிரியர் அவற்றின் மேலும் அக்கரச் சுதகம், மாத்திரைச் சுதகம், பிந்துமதி, பிரேளிகை, நிரோட்டி, அலகிருக்கை வெண்பா, முண்டப் பாட்டு, தேர்ன்க, திரியாகி, கண்ட கட்டு, கல்லவல் என்பவற்றையும் கூறுவர்.

இந்தச் சித்திர கவிகளை மிறைக் கவி என்றும் அருங்கவி என்றும் சொல்வது உண்டு. இவை வட மொழியில் மிகுதியாகப் பரந்து கிடப்பன என்பதை,

"...மற்றும் வடநூற் கடலுள்

ஒழுங்குடன் வைத்த உதாரணம் நோக்கி விரித்து முடித்த மிறைக்கவிப் பாட்டே'

என்ற யாப்பருங்கலச் சூத்திரம் புலப்படுத்துகிறது. அந் நூலில் பெயரளவில் சொல்லப்பெற்ற சித்திர கவி களுக்கு உரையாசிரியர் இலக்கணம் கூறுகிருர். அவ் வுரையினுல் இங்கே காட்டப்பெற்ற மிறைக் கவிகளில் சிலவற்றில் பல வகை உள்ளனவென்று தெரிய வருகிறது. சக்கரம் என்பது ஒரு சித்திர கவி. அது பல வகைப்படும். பூமிச் சக்கரம், ஆகாயச் சக்காம், பூமியாகாயச் சக்கரம், வட்டச் சக்கரம், புருடச் சக்கரம், சதுரச் சக்கரம், கூர்மச் சக்கரம், மந்தரச் சக்கரம், நாடகச் சக்கரம், சனி புருடச் சக்கரம், சலாபச் சக்கரம், சக்கரச் சக்கரம், அரவுச் சக்கரம் முதலியன அதன் வகை கள். "புணர்ப்பாவையுள்ளும் போக்கியத்துள்ளும் கிரணியத்துள்ளும் வதுவிச்சையுள்ளும் கண்டுகொள்க’ என்று உரையாசிரியர் கூறுவர். அவர் கூறும்

1. பா. வி. ப. 492.

2. டிை சூ. 96. 3. டிெ ப. 497.