பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தமிழ்க் காப்பியங்கள்

பந்தம், கடக பந்தம் என்பன அவை. மாறன் அலங்கார மூலத்தாலும் உரையாலும் தெரிந்த சித்திர கவிகளுள் முந்திய நூல்களில் காணப் பெருத பல இருப்பதை உணரலாம். * - நவநீதப் பாட்டியல் உரையில், 'இவ் வகைப்பட்ட செய்யுளெல்லாம் பாடுமிடத்துத் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் முடிபுனைந்த மன்னர்க்கும் பாடலாம். அல்லாதவர்களுக்குப் பாடலாகாது. பாடில் பாடுவித்துக் கொண்ட தலைமகனுக்கு அர்த்த நாசமும் புத்திர நாசமும் பிராண நாசமும் வரும். பாடிய புலவனுக்குச் சொல்லா னந்தத்தினலே அடாத வியாதி அடுத்து அவன் குட்ட நோய் கொண்டு காலும் கையும் குறைந்து மரிப்பான்; மறுமைக்கு நகரத்து அழுந்துவன். அதல்ை சாதிக்குத் தக்க செய்யுளறிந்து பாடுக' என்று உரையாசிரியர் எழுதினர். .

தமிழ்விடு துரதில், "அக்கர வர்த்தியென லாமென்பார் பூலோக சக்கர வர்த்தியும் நீ தானன்ருே-சக்கரமுன் பேந்தி நெடுந்தேர்மேல் ஏறிச் சுழிகுளம் நீந்தியோர் கூட நிறைசதுக்கம்-போந்து மதுரங் கமழ்மாலை மாற்றணிந்து சூழும் சதுரங்க சேனே தயங்கச்-சதுராய் முரசங் கறங்க முடிவேந்தர் சூழ வரசங்க மீதிருந்த வாழ்வே' என வந்துள்ள பகுதியில் எட்டுச் சித்திர கவிகளின் பெயர்கள் புலப்படுத்தப்பட்டிருக்கின்றன.'

1. கு. 67, உரை - . - . 2. கண்ணி, 46.9. х # 3. வி. கோ சூரியகாராயண சாஸ்திரியார், "சித்திரகவி விளக்கம்: என்ற நூல் ஒன்று எழுதியிருக்கிருர். அதில் தண்டியலங்காரத்தில் கண்ட சித்திர கவிகளோடு, விருச்சிக பந்தம், சதுரங்க துரக கதி பக்தம் என்பன

வற்றையும் விளக்கினர்; வில்வதள பந்தம் என்ற சுவியின் பெயரை உரைத்தார். .