பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் 199

தமிழில் சொல்லணிகள் நாளடைவில் விருத்தி வாயின. அதனுல் உண்மைக் கவித்துவம் இழுக்குற்றது. அக்கவிகளை இயற்றுவது மிகக் கடினமான காரியம்; இயற்றிலுைம் அவற்றை உணர்ந்துகொள்வது அதை விடக் கடினமான காரியமேயாகும். அத்தகைய கவிகளை இயற்றும் ஆற்றல் பெற்றவர்களைச் சித்திரகவி என்று கூறுவது மரபு.’ -

. இதுகாறும் விரிவாக ஆராய்ந்த இலக்கணங்களை, வட மொழியினின்றும் அறிந்த பல செய்திகளோடு தொடர்புபடுத்தி உரைத்தது எங்ங்ணம் ஏற்புடைய தாகும் என்னும் ஐயம் இங்கே எழலாம். காப்பிய வகைகள் பிற்காலத்தில் பெரும்பாலும் வடநூற்படி அமைத்த காப்பிய இலக்கணத்தையே பின்பற்றுவன வாகும். அன்றியும், பெரும்பாலும் பொருளோடு தொடர்புடைய காப்பிய இலக்கணங்கள் எந்த மொழியில் இருப்பினும் கொள்ளுவதற்கு உரியனவே ஆகும். கவிச் சுவையையும், கவி அழகையும்பற்றி அறிஞர் களால் உணர்த்தப்படும் கருத்துக்களை எம்மொழியினரும் பயன்படுத்திக் கொள்ளலாம். கிரேக்க மொழியில் உள்ள காப்பிய இலக்கண நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அமைத்துப் பொருள் அறிந்தனர். இங்ங்ணமே வடமொழிக் காப்பிய இலக்கணங்களை இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்த்து அமைத்துக் கொண்டனர். தமிழிலும் தண்டியலங்காரம் முதலியன வடநூல் வழி எழுந்த நூல்கள். அவையெல்லாம் பயன்படுவனவே யாதலின், இங்கே கூறிய கருத்துக் களும் தமிழுக்குப் பயன்படுவன என்பதில் தடை யொன்றும் இல்லை. இதுகுறித்துத் தமிழ்த் தண்டி யலங்கார உரையாசிரியர் எழுதியுள்ள கருத்து இங்கே அறிதற்குரியது:- - -

1. பா. வி. ப. 518.