பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தமிழ்க் காப்பியங்கள் -

இல்லையேல் காப்பியம் கலங்கிய தன்மையை உடையதே. இதனையே முன்பு, சவியுறத் தெளிந்து என்பதிலும் குறித்தார். இக் கருத்தையே திருவிளையாடற்புராண ஆசிரியர், -

கல்லார் ജിലേrർ கலங்கிக்

கலைமாண்ட கேள்வி வல்லார் கவிபோற் பலவான்றுறை

தோன்ற வாய்த்துச் செல்லாறு தோறும் பொருளாழ்ந்து

தெளிந்து தேயத் தெல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ள

இறுத்த தன்றே” என்பதில் அமைத்தனர். தேயத்து எல்லாரும் வீழ்ந்து பயன் கொள்ள என்பது மிகவும் அரிய கருத்து. பண்டித பாமர ரஞ்சிதமாகக் காப்பியம் அமைய வேண்டும். பண்டிதர் தம் அறிவின் திறத்தால் படிக்குந் தோறும் புதுப் புதுச் சுவையை அநுபவிக்க வேண்டும். ஆராய ஆராய அச் சொற்களின் பொருளமைப்பும் பாவமும் விரிந்து விளங்க வேண்டும். இதனைக் கம்பர் வேருேரிடத்தில்,

கல்லியம் கவிஞ காவில்

பொருள்குறித் தமர்ந்த நாமச் சொல்லெனச் செய்யுள் கொண்ட . தொடையெனத் தொடையை நீக்கி

எல்லையில் செல்வந் தீரா

இசையெனப் பழுதி லாத பல்லலங்காரப் பண்பே .

காகுத்தன் பகழி யம்மா” என்பதில் ஒருவாறு குறிப்பிக்கின்ருர்.

கவிஞருடைய சொல்வளமும் பொருள்வளமும் காகுத்தன் பகழியைப் போலக் குறித்த பொருளைப் பயந்து பலவாக விரிந்து செல்வன வென்பது அவர் கருத்து.