பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய அலங்காரங்கள் 203

கவிச் சுவையிலே ஈடுபட்ட நாவுக்கரசர், சொல் லிலே பரவிய பொருளை ஆராய்ந்து மனம் ஒன்றுபட வேண்டும் என்பர். அத்தகைய மனவொருமையிலே இறைவன் அருள் உண்டாகும். இன்றேல் அவன் அருளான். இதனைக் கீழ்வேளுர்த் திருத்தாண்டகத்தில் அப் பெரியார்,

'சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்

தூங்காதார் மனத்திருளே வாங்கா தானே’’ என்று அமைக்கின்ருர். 'புத்திக்குள் உண்ணப்படும் தேன்" என்றும், முத்திப் பழம்" என்றும் தண்டமிழைத் தமிழ்விடு தூதுடையார் பாராட்டுகின்ருர். காப்பியத் தேன் புத்தியில்ை உண்ணப்படின் மனம் ஒருமித்து முத்தி வழியைக் காட்டும் என்பது அவர் கருத்துப் போலும். -

காப்பியங்களின் பயன் கவிச் சுவையை அறிந்து அதன் வாயிலாகக் கடவுள்பால் அன்பு பூண்டு ஒழுகுதலே என்பது நம் நாட்டார் கொள்கை. ஆதலின் காப்பியங்களிற் பெரும்பாலன சமயநூற் கருத்துக்களை அங்கங்கே வற்புறுத்திச் செல்கின்றன.