பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_Ꮾ காப்பிய இலக்கியங்கள்

பண்டைக்காலத் தொடங்கி வளம் மலிந்து விளங்கும் செந்தமிழ் மொழியில் பல பல காப்பியங்கள் உண்டாயின. ஒரு மொழியின் வளத்தைக் காப்பியங் களே புலப்படுத்தும். மிகப் பழங் காலத்தில் தமிழில் இயற்றப் பெற்ற காப்பியங்களில் ஒன்றும் இப்பொழுது கிடைத்திலது. அங்ங்னம் கிடைக்காமை காரணமாகக் காப்பியமே முன்பு இருந்ததில்லை என்று கூறுதல் ஏற்புடையதன்று."

பழங் காப்பியங்கள்

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று சங்கத்தினர்களும் இயற்றிய நூல்களில் முதல் இரண்டு சங்கத்துக்கு உரியவற்றில் தொல்காப்பியம் ஒழிந்த ஏனைய நூல்கள் மறைந்தன. அவ் விரண்டு சங்கங்களிலும் மருவிய நூல்களின் பெயர்கள் சில, இறையனாகப் பொருள் உரை முதலியவற்ருல் அறியப் படுகின்றன. அவர்களால் பாடப்பட்டன எத்துணையோ. பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரி யாவிரையும் என இத் தொடக்கத்தன என்று

Ti. The fact, however, that during long periods no Kavya is known to ws, does not allow us to conclude that during these periods

there was no cultivation of Kavya at all’—The Foundations of Indian, Poetry and their Historical Developonent by J. Nobel, Ph. D. p. 6.