பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் - 205

முதற் சங்க நூல்களையும், அவர்களால் பாடப்பட்டன: கலியும் குருகும் வெண்டாளியும் வியாழ மாலை அகவலு மென இத்தொடக்கத்தன என்ப' என்று இடைச் சங்க நூல்களையும் இறையனரகப் பொருள் உரை கூறுகின்றது. முதல் இரண்டு சங்கத்தாரால் இயற்றப் பட்ட இலக்கியங்கள் இவை. இந்த இலக்கியங்களில் மூன்று தமிழுக்கும் உரியவை உள. இவற்றுள்ளே எவை காப்பியங்களாகிய பொருட்டொடர் நிலைச் செய்யு ளென்பதை அறுதியிட முடியவில்லை. மூவகைத் தமிழும் பல பெரும் புலவர்களால் ஆராயப்பட்ட அவ் விரண்டு சங்கங்களிலும் மூவகையான தமிழ் இலக்கியங்களும் இயற்றப்பட்டன. நாடகத் தமிழ்க் காப்பியங்களும் இயற்றமிழ்ப் பொருட்டொடர்நிலைச் செய்யுட்களும் அக் காலத்தே பல இயற்றப்பட்டிருத்தல் கூடும். கடைச் சங்க காலத்தில் இயற்றப்பெற்ற நூல்களிற் சிலவே இப்பொழுது கிடைக்கின்றன. அவற்றுள்ளும் இசை நாடகத் தமிழ்ச் செய்யுட்கள் கிடைத்தில, முற்கூறிய இரண்டு வகைக் காப்பியங்களும் கடைச்சங்க காலத் திலும் பல இயற்றப்பட்டன என்று சொல்லலாம்.

சங்க காலத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட காப்பி யங்களுக்குள் இணையற்றதாக விளங்கும் பெருங்கதை யைப்பற்றிக் கூறும் அடியார்க்குநல்லார், அது இடைச் சங்க காலத்துச் செய்யுட்களாகிய கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியம் ஆராய்ந்து செய்யப்பட்டதென்று சிறப்பிக்கின்ருர். பெருங்கதை ஆசிரியர் அவ்விடைச் சங்க நூல்களைப் பின்பற்றினரென்பது கொண்டு, அக் காப்பியத்திற்கு மூலமாகிய பல முறைகள் முந்தை நூல்களில் இருந்தன் என்பதும், அப் பண்டை நூல்களிலிருந்து பல சொல்லை யும் பொருளையும் அவர் எடுத்தமைத்தனர் என்பதும்,