பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தமிழ்க் காப்பியங்கள்

காப்பியத்துக்குரிய அமைப்பினை அப் பழைய நூல்கள் உடையன என்பதும் ஊகிக்கற்பாலன. -

தொல்காப்பியத்துக்கு முன்னர் உண்டானவை

தொல்காப்பியத்தில் தோல் முதலிய வனப்புக்களைப் பற்றிக் கூறப்பட்ட இலக்கணங்கள் சிலவகையான பொருட்டொடர்நிலைச் செய்யுட்களின் இலக்கணங் களாக இருக்கின்றன. ஒரு மொழியில் இலக்கியங்கள் உண்டான பிறகே இலக்கணம் உண்டாகும். பொருள் இருந்தாலன்றிப் பொருளின் தன்மையை வரையறுக்க இயலாது. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம் பலின்" என்பது இக் கருத்தைத் தெரிவிக்கின்றது.

"எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல

இலக்கியத்தினின் றெடுபடும் இலக்கணம்”

என்ற போலி அகத்தியங்கூட இவ் வுண்மையைக் கூறுகின்றது. ஆதலின், தொல்காப்பியத்தில் உள்ள இலக்கண விதிகளுக்குரிய இலக்கியங்கள் தொல்காப் பியர் காலத்திற்கு முன்பும் அவர் காலத்திலும் வழங்கி யிருக்கவேண்டுமென்று கொள்ளலாம். -

வனப்பின் இலக்கணங்கள் முன்பு ஆராயப்பட்டன. அவ் வனப்புக்களுள் ஒவ்வொன்றுக்கும் உரையாசிரி

1 “Criticism ordiiiarily follows oreation, Histrionies and Dramatic techniques develop only after the Drama attains a definite and complete form.'-Dr A. Sankaran, M.A., Ph. D. Some aspects of Literary Criticism in Sanskrit, p. 10; “It is not necessary to prove that poetics are possible only under the supposition that poetry Kisted already, and that poetry is older than poetics " - The Foundations of Indian Poetry and their Historical Development, p. 2.