பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 207

யர்கள் உதாரணம் காட்டிப்போந்தனர். அவ்வுதாரணங் கள் தொல்காப்பியனர் காலத்துக்குப் பிற்காலத்தில் எழுந்த நூல்களாகும். தொன்மைக்கு உதாரணமாகப் பாரதம், தகடுர் யாத்திரை, சிலப்பதிகாரம் என்பனவும், தோலுக்கு உதாரணமாகச் சிந்தாமணியும், இயைபுக்கு உதாரணமாக மணிமேகலை, பெருங்கதை ஆகியனவும் அவர்களாற் காட்டப்படுகின்றன. அவை தொல்காப் பியஞர் காலத்திற்குப் பின் உண்டான காப்பியங்கள். பழைய நூல்கள் உண்யாசிரியர்கள் காலத்தே வழக்கு ஒழிந்தமையின் அவற்றைக் கூறவில்லை; ஆயினும் இலக்கணத்தைப் புலப்படுத்த வேண்டித் தம் காலத்து வழங்கிய நூல்களை உதாரணம் காட்டினர். அவர்கள் காட்டிய உதாரணங்கள் தொல்காப்பியத்தைப் படித்தறி வாருக்குப் பொருள் விளங்கும் பொருட்டு உதவுவனவே யன்றி, தொல்காப்பியர் இலக்கணம் வகுத்தற்குக் காரண மாக இருந்த இலக்கியங்கள் அல்ல.

தம், காலத்து வழங்காத இலக்கணங்களுக்கு உதாரணம் காட்ட இயலாதபோது உரையாசிரியர்கள், "இவ்விலக்கணம் அமைந்தவை அக் காலத்து வழங்கின போலும்! என்று கூறிச் செல்வர். இயைபு என்னும் வனப்பின் இலக்கணத்தைக் கூறும் சூத்திர உரையில் பேராசிரியரும் நச்சினர்க்கினியரும், ஞகரம் முதலிய பதினெரு புள்ளிகளை இறுதியாக உடைய செய்யுட்கள் அமைந்த காப்பியங்களுக்கு உதாரணம் காட்ட இயலாமல், னகரவீற்ருன் முடிந்ததற்குமட்டும் உதயணன் கதையையும் மணிமேகலையையும் காட்டினர்; ஏனை ஈற்றுக்கு உதாரணம் காட்டிலராயினும், மற்றை fற்ருன் வருவனவற்றுக்கும் ஈண்டு இலக்கணம் உண்மையின் இலக்கியம் பெற்ற வழிக் கொள்க; இப் பொழுது அவை வீழ்ந்தன போலும் என்று பேராசிரி