பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தமிழ்க் காப்பியங்கள்

பரும், ஒழிந்த ஒற்றுக்களுக்கும் இலக்கணம் உண்மை யின் இலக்கியம் இக் காலத்து வீழ்ந்தனபோலும் என்று நச்சினர்க்கினியரும் மொழிந்தனர். அவர்கள் கூற்ருல் தம் காலத்துக்கு முன்பு இருந்த இலக்கியங்களை நோக்கியே தெர்ல்காப்பியர் இலக்கணம் வகுத்தா ரென்பது தெரியவரும். இக் கொள்கையையே ஏனைய வனப்பிலக்கணங்களுக்கும் கொள்ளவேண்டும். இவ் வாறு, இலக்கணம் உண்மையால், முன்பு வழங்கி யிருத்தல் வேண்டும் என்று கருதத் தக்க காப்பியங்கள் வருமாறு :- . -

1. தொன்மை என்னும் வனப்பு அமைந்த உரை. யிடை யிட்ட பாட்டுடைச் செய்யுட்களாகிய காப்பி யங்கள். -

2. தோல் என்னும் வனப்பு அமைந்த காப்பி யங்கள். . بہ۔ ’’

3. புதிய கதையை அமைத்து இயற்றிய புதுக் காப்பியங்கள்.

4. ஞணநமன யரலவழள என்ற மெய்களால் இற்ற செய்யுட்களை உடைய காப்பியங்கள்.

5. சேரி மொழியால் புலன் என்னும் வனப்பு அமைந்த நாடகக் காப்பியங்கள்.

ஐம்பெருங் காப்பியங்கள் என்னும் வழக்கு

தொல்காப்பியத்தின் பின்பு உண்டான காப்பியங் கள் பல. கடைச்சங்க காலத்தே வழங்கிய இராமாயணம், பாரதம், தகடுர் யாத்திரை முதலியன அவற்றுட் சில.. அவற்றிற்குப் பின் எழுந்த காப்பிய வரிசையில் சிறப் புற்று வழங்குவன ஐம்பெருங் காப்பியங்கள் என்னும்