பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 தமிழ்க் காப்பியங்கள்

'பற்ரும் இலக்கண நூற் பாவும் நூற் பாவறிந்து

கற்றர் வழங்குபஞ்ச காப்பியமும்" என்னும் பகுதியில் பஞ்ச காப்பியம் என்னும் தொடர் வருகின்றது. இவ்விரண்டு இடங்களிலும் அப் பஞ்ச காவியங்கள் இன்னவை யென்று கூறப்படவில்லை. சென்ற நூற்ருண்டில் இயற்றப்பட்டதாகிய பொருட் டொகை நிகண்டு என்னும் நூலில்,

சிந்தா மணிதிகழ் சிலப்பதி காரம்

மணிமே கலவ8ள யாபதி குண்டல கேசி பஞ்சகா வியமெனக் கிளத்துவர்” என்ற ஒரு சூத்திரம் காணப்படுகிறது. இதில் ஐம் பெருங் காப்பியங்களின் பெயர்களும் உள்ளன.

'சிந்தா மணியாஞ் சிலப்பதிகா ரம்படைத்தான்

கந்தா மணிமே கலபுனைந்தான்-தந்தா வ8ளயா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே சிக்கும்”

என்னும் திருத்தணிகை யுலாப் பகுதியில் இவ்வைம் பெருங் காப்பியங்களின் பெயர்களும் தொனியில் அமைந்து காணப்படுகின்றன. சூடாமணிப் புலவர் என்பவரால் இயற்றப்பட்ட வைசிய புராணம் என்னும் நூலில் 31, 32, 33, 34, 85 என்னும் ஐந்து அத்தியா யங்கள் இவ்வைந்து காப்பியங்களில்ை வைசியர் சிறப்புப் பெற்றதை உரைக்கும். பொருட்டொகை நிகண் டிலும் திருத்தணிகை யுலாவிலும் வைசிய புராணத்திலும் இவற்றின் முறை வைப்பு ஒன்ருக இருக்கின்றது. இம் முறை வைப்பு. கால அடைவை நோக்கி வைக்கப் பட்டது அன்று; ஏனெனின் சிலப்பதிகாரமும் மணி மேகலையும் ஏனைய மூன்று நூல்களுக்கும் முற்பட்டன.

1. கண்ணி, 58, 2. கண்ணி, 526-7.