பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 211

எனவே, சுவையை நோக்கியோ வேறு எக் காரணத்தி ஞலோ இம்முறை வழங்கியதென்று தெரியவில்லை.

முன்பு கூறியவற்ருல் ஐம்பெருங் காப்பியம் என்னும் வழக்குப் பிற்காலத்த தென்பது விளங்கும். காவியங் களின் வைப்பு முறைக்கும் போதிய காரணங்கள் இல்லை என்பதும் தேற்றம். அன்றியும் இவ் வைந்தும் பெருங் காப்பியங்கள்தாமா என்று ஆராய்ந்தால் அல்ல வென் னும் முடிபுதான் பெறப்படும்.

சீவக சிந்தாமணி பெருங் காப்பியம் என்பதற்கு ஐயம் இல்லை. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சேர்ந்து ஒரு காப்பியமாக நடத்தல் வேண்டும் என்பது இளங்கோவடி களின் கருத்தென்று அடியார்க்கு ல்லார் கூறினும், தனித்தனியே எடுத்து ஆய்ந்தால் சிலப்பதிகாரத்தைப் பெருங் காப்பியமென்றே சொல்ல வேண்டும். மணி மேகலையோவெனின் அறனும் வீடுமே பொருளாகக் கொண்டது; பெளத்த சமயச் சார்பு உடையது; தனியே பெளத்த சமயக் கொள்கைகளையும், பிற மதக் கொள்கை கள் பயனற்றவை என்பதையும் இரண்டு காதை களாற் கூறுவது. நாற்பெரும் பொருள் அவமதியும் அதில் காண்ப்படவில்லை. ஆதலின் அதனைப் பெருங் காப்பிய மென்று கூறுதல் பொருந்தாதென்று தோற்றுகின்றது. வளையாபதியைப்பற்றிய செய்திகள் போதிய அளவு கிடைக்கவில்லை; ஆதலின், அது பெருங்காப்பியமா அன்ரு வென்று வரையறுத்தல் இயலாது. குண்டல கேசியை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் வாதநூல் வரிசையில் சேர்த்து வழங்குவர். நீலகேசி அவ் வாதங் களை மறுத்துக் கூறுவதும், அந்நூல் பெரும்பாலும் சம யக் கருத்துக்களை வெளியிடற்கு எழுந்தது என்பதை உணர்த்தும். எனவே, அந்த நூலில் பெருங்காப்பியத்