பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 தமிழ்க் காப்பியங்கள்

துக்குரிய இலக்கணங்கள் குறைவின்றி நிரம்பியிருக்கும் எனக் கொள்ளுதற்கு இல்லை. யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியர் குண்டலகேசியோடு இனமாக வைத்த ஏனைய கேசிகளுள் இப்பொழுது கிடைப்பது நீலகேசி ஒன்றே. அந் நீலகேசியோ பெருங் க்ாப்பியமாகச் சொல்லும் தகுதி இல்லாதது. எனவே, அதனேடு வைத்து எண்ணப்படும் குண்டலகேசியும் அத்தகையத்ே எனறு கொள்வதில் இழுக்கொன்றும் இல்லை.

எனினும், வீரசோழிய உரையாசிரியர் குண்டல கேசியைக் காப்பியம் என்று கூறுவதோடு பல வகை யாற் சிறப்பிக்கின்ருர்.

குண்டலகேசி முதலான காப்பியமெல்லாம் விருத் தமாம்.'

"குண்டலகேசியும் உதயணன் கதையும் முதலாக உடையவற்றில் தெரியாத சொல்லும் பொருளும் வந்தனவெனின், அகலக் கவி செய்வானுக்கு அப் படியல்லது ஆகா தென்பது." - :

  • - இனிப் பாவிகமாவது அகலக்கவிப் புலவன் கருத்து. அது குண்டலகேசி உதயணன் கதை முதலாயினவற்றுள் உண்டெனக் கொள்க."

இவற்ருல் குண்டலகேசி விருத்த யாப்பால் செய்யப் பட்டதென்றும், தெரியாத சொல்லும் பொருளும் அதன் கண் வந்தனவென்றும், அகலக்கவி யென்றும் நாம் அறி கின்ருேம். இவ் வுரையாசிரியர், சிந்தாமணி முதலியன

1. பாப்புப் படலம், 23, உரை. 2. ւս. 140. 3. ս. 152, -