பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 213

இருப்பவும், குண்டலகேசியையும் உதயணன் கதையை யுமே எடுத்துக் கூறுவானேன்? அவற்றுள்ளும் குண்டல கேசியை முன் வைத்துச் சொல்வதற்குக் காரணம் என்ன? குண்டலகேசியில் உள்ள சமயச் சொற்களும் பொருளும் தெரியாமல் இருப்பதைேடு பெருங் கதையில் உள்ள பலவகைச் சிறப்புடைய சொற்களும் பொருள் களும் தெரியாமல் இருப்பதை ஒருங்கே வைத்ததன் நோக்கம் யாது? இவ்வினுக்களுக்கு, குண்டலகேசியி னிடத்தில் உரையாசிரியருக்கு உள்ள பற்றெ. பதே தக்க விடையாகும். அவ் வுரையாசிரியர் பெருந்தேவனுர் என்பவர். அவர் பெளத்த சமயத்தினராதலின் அச் சமய நூலாகிய குண்டலகேசிக்குச் சிறப்புத் தருவது இயல்பே யன் ருே? எனவே, அவர் கருத்தையே ஆணை யாகக் கொண்டு குண்டலகேசியைப் பெருங் காப்பி யத்துள் ஒன்ருக எண்ணுதல் வன்மை பெருது.

இங்ங்னம், மணிமேகலையும் குண்டலகேசியும் பெருங் காப்பியத்திற்குரிய இலக்கண அமைதியை நன்கு பெரு திருப்பவும், அவற்றையும் பெருங்காப்பியங்களோடு சேர்த்து எண்ணியதற்குக் காரணம் தெரியவில்லை. பெருங் காப்பியங்கள் வேறு இல்லை யென்று கூறு வதற்கும் இயலாது. காப்பிய இலக்கணம். குறைவறப் பெற்ற பெருங்கதையும் சூளாமணியும் நல்ல காப்பி யங்கள் அல்லவோ? அவற்றைச் சேர்த்துக் கூருத தற்குக் காரணம் என்ன? மணிமேகலை, குண்டலகேசி என்னும் இரண்டினையும் நீக்கிப் பெருங் கதையையும் சூளாமணியையும் சேர்த்து வழங்கியிருப்பின், ஒருவாறு அமைவுடையதாக இருக்கும். -

ஆயின், இவ் வைம்பெருங் காப்பியம் என்னும் வழக்கு எழுந்ததற்குக் காரணம் யாது? பிற்காலத்தில் வட நூல் மரபைப் பின்பற்றிய சொற்களும் பொருளும்