பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 215

கனங்களை உடையதன்று' என்றும், இந் நூலில் இலக்கண வழுக்கள் உள்ளன; சந்த நயமும் பொருட் பொலிவும் இல்லை என்றும், நிரம்பிய புலமை இல்லாத ஒருவரால் இது செய்யப்பட்டிருக்கலாம் என்று அவர் (வீடுர் அப்பாசாமி சாஸ்திரியாரவர்கள்) கூறினர். எனக்கும் அஃது உடம்பாடே என்றும் எழுதியிருக் கின்ருர்கள். இவற்ருல் அப் புத்தகம் இலக்கியம் என்று சொல்லுதற்கும் தகுதி அற்றதென்பது தெளியப்படும். நாக குமார காவியம், யசோதர காவியம் என்பனவும் அத்தகையனவே. நீலகேசி வெறும் வாத நூல். சூளாமணியோ சிறந்த காப்பியம். இவற்றை ஒருங்கு வைத்து எண்ணுதல் எங்ங்ணம் அமைவுடைய தாகும்? இவை ஐந்தும் ஜைன சமய நூல்கள் என்ற ஒன்றுதான் இவற்றினிடையே உள்ள ஒப்புமை. -:

இப்பொழுது புதிதாக எழுந்த ஐஞ்சிறு காப்பிய வழக்காறு போலவே முன்பு ஐம்பெருங்காப்பிய வழக் காறும் எழுந்ததென்றே தோன்றுகின்றது. இல்லை யெனின் பேராசிரியர் முதலிய உரையாசிரியர்கள் ஏனைய தொகை நூல் வரிசைகளைக் குறிக்கும்போது இவற்றைக் குறிப்பிடாமல் இருத்தற்குக் காரணம் இல்லை.

இப்பொழுது கிடைக்கும் நூலுரைகளால் ()

பெயரளவிலே அறியப்படும் சில பழங் காப்பியங்கள், (2) உரைகளில் அங்கங்கே மேற்கோளாகச் சில செய்யுட்கள் மாத்திரம் எடுத்துக்காட்டப்பெற்ற காப்பியங்கள், (3) வழங்கி வரும் காப்பியங்கள் எனப் பழைய காப்பியங்களை மூன்று வகையாக்கலாம்.

பருப்பதம்

. பெயர் மாத்திரம் தெரியும் பழைய நூல்கள் பருப் பதம், கலியாணன் கதை, புராண சாகரம் என்பன. இவை