பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தமிழ்க் காப்பியங்கள்

சங்க காலத்துக்கு முந்தியனவோ பிந்தியனவோ தெரிய வில்லை. பருப்பதம் என்பது உரையுள்ள நூலோ என்று ஐயுறுதற்கு வாய்ப்பு உண்டு. பேராசிரியர் பாட்டிற்கு உரையெழுதுவதும் உரைநடை வகையிற் சேர்ந்தது என்று கூறும்பொழுது, ஒழிந்த பாட்டிற்கு இவ்வாறே பொருளெழுதின் அஃது ஒக்கும்; அவை பாரதம், பருப் பதம் முதலியன' என்று உணர்த்துகின்ருர். இங்கே பாட்டு என்றது இலக்கியச் செய்யுளை, அதற்கு உரை எழுதும் முறையை உதாரண வாயிலாகப் புலப்படுத்த வந்தவர் பாரதம், பருப்பதம் என்னும் இரண்டையும் ஒருங்கே காட்டுகின்ருர். அவர் கூறும் செய்திகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கும்போது பாரதமும் பருப்பதமும் தனித் தனியே செய்யுள் இலக்கியங்கள் என்றும் அவற் றிற்குப் பழைய உரை உண்டென்றும் தோற்றுகின்றது.

ஜைன சமய நூலாகிய ரீபுராணத்தில் நாரதன், பர்வதன் என்ற இருவருடைய வரலாறு கூறப்படு கின்றது. நாரத சரிதை என்ற காப்பியம் ஒன்று புறத் திரட்டினுல் தெரிய வருகிறது. அது நாரதன் வரலாறு என்பதை அப்பெயராலே உய்த்துணரலாம். அப்படியே பர்வதனுடைய வரலாற்றை உரைக்கும் காப்பியத்துக்குப் பருப்பதம் என்னும் பெயர் வழங்கியிருத்தலும் கூடும். பர்வதம் என்ற வடசொல் தமிழில் பருப்பதம் என்று வருவது இயல்பே. .

கலியாணன் கதை

கலியாணன் கதை என்பது உதயணன் கதையைப் போன்றது. அவ் விரண்டையும் யாப்பருங்கல விருத்தி

1. தொல், செய்யுள் 173. பேர். 2, எஸ். வையாபுரிப் பிள்கள் : புறத்திரட்டு, முகவுரை. ப. Eiv.