பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 217

யுரையாசிரியர் இனப்படுத்தி எடுத்துக் காட்டுவர். கலியாணன் என்பவனது வரலாற்றைக் கூறும் காப்பிய மாக இது இருக்கலாம். இது சங்க காலத்திற்குப் பிற்பட்டதாகவே தோற்றுகின்றது. இந் நூலில் ஒவ்வோர் உறுப்பும் 'என்' என்ற இறுதியை உடையது. ஓர் உறுப்பின் ஈறும் அடுத்த உறுப்பின் முதலும் ஒன்றி வரும் சொற்ருெடர்நிலைத் தன்மையும் இக் காப்பியத்தில் காணலாம். நிலை மண்டில ஆசிரியப் பாக்களால் ஆன நூல் இது."

புராண சாகரம்

'இன்னும் பலவடியால் வந்த பஃருெடை வெண்பா இராமாயணமும் புராண சாகரமும் முதலாகவுடைய செய்யுட்களிற் கண்டு கொள்க' என்பதில் புராண சாகரம் என்னும் நூற் பெயர் சொல்லப்படுகிறது. புராணம் என்பது பழைய வரலாறு. பல பழைய வரலாறுகளைக் கூறும் தொடர்நிலைச் செய்யுளாக இந் நூலைக் கருதலாம். கதாஸரித் ஸாகரம் என்ற வடமொழி நூற் பெயரோடு இதன் பெயரையும் ஒப்பிடுக. இராமாயணத்தோடு சேர்த்துக் கூறப்பட்ட மையின் அதனைப் போலவே இதனையும் ஒரு காப்பியம் என்று கொள்ளலாகும். இதன்கண், பல பஃருெடை வெண்பாக்கள் அமைந்திருந்தன வென்பது மேலே காட்டிய உரைப்பகுதியால் புலனுகின்றது.

இராமாயணம்

சங்க காலத்தில் இராமாயண்ம் ஒன்று வழங்கிவந்த தென்று தெரிகின்றது. இது வெண்பாவும் ஆசிரியப்பா வம் அமைந்த யாப்புடையது. இதன் செய்யுட்கள் பல

1. பா. வி. ப. 262. பா. வி. ப. 238.