பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 219

'மாபாரதந் தமிழ்ப்படுத்தும்

- மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் பகுதி பழங்காலப் பாண்டியர் மாபாரதத்தை வட நூலிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கச் செய்தா ரென்று தெரிவிக்கின்றது. அங்ங்ணம் செய்தோர் இன்னுரென்று இப்பொழுது தெரியவில்லை. மேலே காட்டிய அடியில் குறிக்கப்பட்ட பாரதம் பெருந்தேவனுர் இயற்றியதோ, வேருே தெரியவில்லை. மெய்க்கீர்த்தியில் சொல்லத்தக்க சிறப்புடைமையினுல் அதுவே பெருந் தேவளுருக்குச் சிறப்புத் தந்த பாரதம் என்று கொள்ளலாம். - -

தகடூர் யாத்திரை

கடைச்சங்க காலத்தில் எழுந்த நூல்களுள் இதுவும் ஒன்று. இதனை ஒரு பெருங்காப்பியமாகக் கொள்வதற்கு இல்லையெனினும் சிறுகாப்பியமாகக் கொள்ளலாகும். தகடுர் என்னும் இடத்திற்குப் படைகள் சென்றமையும், போர் புரிந்ததும் பிறவும் இதில் சொல்லப்பட்டன.

தகடு ரென்பது சேலம் ஜில்லாவில் உள்ள தர்மபுரி யாகும். தகடுரில் வாழ்ந்து வந்த அதிகமான் என்பவன் மேல் சேர அரசனை பெருஞ்சேரல் இரும்பொறை என்பான் படையெடுத்துச் சென்று தகடுரை எறிந்து வென்ருள். இந்தப் போர் நிகழ்ச்சியையே இந்நூல் கூறுவதென்று தோற்றுகின்றது. இத் தொடர்நிலைச் செய்யுளில் இடையிடையே உரை விரவி யிருக்கும். அதனால் இது தொன்மை யென்னும் வனப்புடைய தாகச் சொல்லப்படுகின்றது.

1. 8outh Irwdian Inscriptions, Vol. III, p. 454.