பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 தமிழ்க் காப்பியங்கள்

இந்நூற் செய்யுட்களிற் பல புறத்திரட்டிலும், தொல்காப்பிய உரைகளிலும் வந்துள்ளன. தக்கயாகப் பரணி உரையாசிரியர் ஒரு செய்யுளை மேற்கோளாகக் காட்டினர். இந்நூலும் இராமாயணம், பாரதம் என்ப வற்றைப் போல வெண்பாவிகற்பங்களும் ஆசிரியப் பாக்களும் அமைந்த நூலென்று தெரியவருகின்றது. 'பிற பாடை தழுவி வந்த பகுதிகளும் இதில் உண்டு.” போர் நிகழ்ச்சியையும் அதற்கு நிமித்தமாகும் செய்தி களையும் கூறும் இந்நூலில் புறப்பொருளமைதி சிறந்து விளங்கும். அரிசில்கிழார், பொன்முடியார் என்னும் இரண்டு புல்வர்களுடைய பாட்டுக்கள் இந்நூலில் வந்துள்ளன. அங்ங்னமே பலர் பாடிய செய்யுட்கள் இதில் உள்ளன போலும். தொகை நிலையைப் போலத் தொடர்நிலைச் செய்யுளும் பல்லோரால் உரைக்கப் படுதலும் உண்டு என்பது இந்நூலின் அமைப்பிளுல் அறியக் கிடக்கின்றது. - -

சிலப்பதிகாரம்

கடைச்சங்க காலத்தைச் சார்ந்து எழுந்த காப்பியங்களுள் இது ஒன்று. நமக்குக் கிடைக்கும் காப்பியங்களுள் இதுவே பழமை உடையதாகும். ஐம்பெருங் காப்பியங்கள் என்னும் வரிசையில் இதனையும் ஒன்ருக்கி வழங்குகின்றனர்.

இதனை இயற்றியவர் சேரர் குலத்துப் பிறந்த இளங்கோவடிகள். அவர் சேரன் செங்குட்டுவனுக்குப் பின்னவர். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்ருதல் முதலிய மூன்று உண்மைகளையும் புலப்படுத்திமுத்தமிழ்ச்

1. தாழிசை, 4ேl, உரை. - 2. புறத்திரட்டு நூன்முகம், riv.