பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 223

வாணிகன் விளக்கிட்டான். சேவகர்கள் அவனை இழுத்துச் சென்று பாண்டியன் ஆணையால் அவன் தலையை அரிந்தனர். அப்பொழுது அத்தலை துர்க்கை மடியிற் சென்று விழுந்து முறையிட்டது. துர்க்கை, "நீ உன் தம்பி மகளுகப் பிறப்பாய். நான் பாண்டியன் மகளாகப் பிறந்து அவனுக்கு நாசம் உண்டாக்குவேன்" என்று அருளிச் செய்தாள்.

அவ் வாணிகள் தன் தம்பியாகிய வாணிகனுக்கு மக ளுகப் பிறந்து கோவிலன் என்ற பெயரோடு வளர்ந்து வந்தான். அவ் வாணிகன் மனைவி உடனே உயிர் துறந்து காவிரிப்பூம்பட்டினத்தில் சித்திராவதி என்னும் தாசிக்கு மாதகியென்னும் மகளாகப் பிறந்தாள்.

துர்க்கை காலிற் சிலம்புடன் பாண்டியனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளுடைய ஜாதகத்தைக் கணித்த சோதிடர்கள், "இப் பெண்ணுல் உன் குலத் திற்கே நாசம் உண்டாகும் என்று சொன்னமையால் பாண்டியள் அக் குழந்தையைப் பெட்டியில், வைத்து ஆற்றிலே விட்டுவிட்டான். அதனை எடுத்த கோவில னுடைய மாமன் அப் பெண்ணை எடுத்துக் கண்ணகி யென்ற பெயரிட்டு வளர்த்துக் கோவிலனுக்கு மனம் புரிவித்தான். அந்த மணத்தில் நடம் புரிய வந்த மாதவிக்கும் கோவிலனுக்கும் நட்பு உண்டாகவே, இருவரும் ஒன்றுபட்டு வாழலாயினர். பதினன்கு வருஷங்களில் கேர்விலன் தன் செல்வம் முழுவதையும் இழந்தான். பின்னர் மாதவியை விட்டுப் பிரிந்து கண்ணகியோடு போய், மதுரையில் அவள் காற்சிலம்பை விற்கச் சென்று கொலைக் குற்றம் சாற்றப்பெற்று இறந் தான். கண்ணகி பாண்டியன்பாற் சென்று முறையிட்டுத் தன் கனவன் குற்றமற்றவள் என்பதைப் புலப்படுத்