பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தமிழ்க் காப்பியங்கள்

திளுள். அரசன் தன் பிழையை உணர்ந்து இறந்தான். கண்ணகி மதுரையைத் தீயால் அழியச் செய்து தன் கணவனுடன் விமானத்தில் ஏறி வான் சென்ருள், இதைப் பார்த்த குறவர் அரசனுக்கு உரைப்ப, அதுகேட்ட இளவரசன், சாத்த னென்னும் புலவல்ை இக் கதையை விரிவாக அறிந்தார்.

இங்ங்ணம் அமைந்த கதையில் சிலப்பதிகாரக் கதையோடு மாறுபட்ட இடங்கள் பல உண்டு. துர்க்கை யைக் கோவிலனுக்கு மனைவியாக்குதல் விரும்பத்தக்க செய்தி யன்று. இவ் வத்தியாயத்தின் இறுதியில் சிலப் பதிகாரக் கதையைக் காவியமாக ஒருவர் இயற்றினர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆல்ை அங்கே கூறப் பட்ட செய்திகள் மயங்குதற்குரிய முறையில் உள்ளன. இளவரசன், சாத்தர், கூல வாணிபஞர் என்னும் மூவரும் இருந்தபோது சாத்தர் இக் கதையைச் சொன்னராம். -

"கொற்றவன் தமிழ்க்கு வேந்தே கோவலன் வரலா

றெல்லாம் சற்றுநீ ருரைக்க வென்னச் சங்கமோ டிருந்த சாத்தன் குற்றமொன் றற்ற செஞ்சொற் கூலவாணிபனுர் முன்பு இற்றைநாள் முதல தாக இயம்பின னுளவாறெல்லாம்'

என்பது இச் செய்தியைக் கூறும். இதில் சாத்த ரென் பவரே இதனைக் கூறியதாகத் தெரிகிறது.

இவற்றை ஆராயும்போது வைசிய புராணம் இயற்றியவர் சிலப்பதிகாரத்தைப் படித்தவ ரல்லர் என்றும், கர்ண பரம்பரையாக வழங்கிய செய்திகளையே பாடி வைத்தார் என்றும் கொள்ள நேர்கிறது.

1. செய்யுள், 49.