பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தமிழ்க் காப்பியங்கள்

இது, மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களால் குறிப்புரையோடு செவ்வனே பதிப்பிக்கப்பட் டிருக்கின்றது. இந் நூலை இயற்றியவர் கடைச் சங்கப் புலவராதலாலும், சிலப்பதிகாரம் இயற்றப் பட்ட காலத்திலேயே இந் நூல் இயற்றப்பட்டதாத லாலும் இதுவும் அச் சிலப்பதிகாரத்தைப் போன்றே இரண்டு அல்லது மூன்ருவது நூற்ருண்டுக்கு உரிய தாகும்.

சங்க காலத்தைச் சார்ந்த நூல்களில் இறுதியானது மணிமேகலைதான். அதன் நடையும் போக்கும் சங்க காலத்து இனிமையையும் பொருட்சிறப்பையும் உடை யனவாகிச் செல்வதோடு, பிற்காலத்தில் மிக விரிந்து பட்ட சொல்லணிகள் சிலவற்றையும் அது கொண்டிருக் கின்றது. மடக்கு, தொனி, சிலேடை முதலியவற்றைப் பிற்காலக் காப்பியங்களில் சர்வு சாதாரணமாகப் பார்க் கலாம். பழங் காப்பியங்களுக்குள்ளே முதல் முதலில் அத்தகைய அணிகளைப் புகுத்தியவர் சீத்தலைச் சாத்தனரே ஆவர்.

சங்க காலத்துக்குப் பின் எழுந்த நூல்களில் சமய உணர்ச்சி அதிகமாக வெளியிடப்படுகின்றது. இதற்குத் தோற்றுவாய் மணிமேகலை யென்றே சொல்லலாம் பெளத்தர்களைச் சிறப்பிப்பதும் ஏனையோர்களை இழி வாகத் தோற்றச் செய்வதுமாகிய அமைப்புக்களை மணி மேகலையிற் காணலாம். அந்த மனநிலை பிற்காலத்தில் அளவுக்குமேற் போயினமையால் கவியழகும் காவிய

1. சில உதாரணங்கள்:-சொற்பின் வகுதிகபணி. “வலம்புரிச் சங்கம் வறிதெமுக் கார்ப்பப், புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க” (மணிமேகலை 7 : 1.13-14) சிலேடையணி : 'சாகிக் குண்டோ தவறு: (13 :98). "குருகுகரு வுயிர்ப்ப, ஒருதனி ஒய்சிய திருமணிக் காஞ்சி' 18:55-8). வெளிப்படை திகமயணி பருஆக குருகின் உயிர்த்து' (19 28): "பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் (26 : 78).