பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 தமிழ்க் காப்பியங்கள்

பேராளும் தலைவ சானேர்

பெருமைஐங் காவி யத்தின்

தேரார்குண்டலகே சிப்பேர்

நெடுநூலின் சீரு ரைத்தாம்"

என்று கூறித் திருப்தி அடைகின்ருர். குண்டலகேசிப் பேர் நெடுநூலின் சீருக்கும் இந்தச் சுவையற்ற வரலாற். றுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அவர் உணர்ந்திலர் போலும்!

ஜைன சமயக் காப்பியங்கள்

பெளத்த சமயக் காப்பியங்களிற் சிலவற்றின் பெயரே இப்பொழுது தெரிகின்றன. ஆளுல் ஜைன சமயத்தார் இயற்றிய காப்பியங்கள் பலவற்றின் பெயர்கள் இப்பொழுது காணக் கிடைக்கின்றன. சங்க காலத்தில் இருந்த புலவர்களில் சில ஜைனர்களும் இருந்தனர். உலோச்சனுர் என்னும் நல்லிசைப் புலவரை ஜைனராகவே கொள்வர். சிலப்பதிகாரம் ஜைன. சமயச் சார்பு உடையது. பெருங் கதை, சீவக சிந்தாமணி, சூளாமணி, சாந்தி புராணம், நீலகேசி, மேருமந்தர புராணம், யசோதர காவியம், உதயண குமார காவியம், நாக குமார காவியம் முதலியன ஜைன சமயக் கொள்கை களை அறிவுறுத்தும் காப்பியங்களே யாகும். இவற்றுள் முதல் இரண்டுமே பெருங் காப்பியமென்னும் வரிசையிற். சேர்க்கும் தகுதி வாய்ந்தவை.

பெருங்கதை

சங்ககாலத்திற்குப் பின் உண்டான பழைய காப்பி

யங்களுள் ஒன்று பெருங்கதை. அது நடையமைப் பிளுலும் பொருட் சிறப்பினுலும் காப்பியங்களுள் தலைமை