பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 235,

யுடையதாகக் கருதத் தகுவது. சங்க காலத்தைச் சார்ந்து எழுந்த சிலப்பதிகாரத்திற்கும் மணிமேகலைக்கும். பிறகு இயற்றப்பட்டவற்றுட் சிந்தாமணிக்கும் முற். பட்டது இந் நூலென்று தோற்றுகின்றது. இந்நூலுக்கு முதல் நூலாகக் கருதப்படும் வடமொழி பிருகத்கதையை இயற்றிய கங்க அரசனகிய துர்வி நீதன் என்பவன் ஆரும் நூற்ருண்டின் இறுதியில் இருந்தவன். சிந்தாமணி, 9-ஆம் நூற்ருண்டில் இயற்றப்பட்டது. தமிழ்ப் பெருங் கதை இம் மூன்று நூற்ருண்டுகளுக்கும் இடைக் காலத்தில் இயற்றப்பட்டிருத்தல் கூடும்.

தமிழ்நாட்டில் பெருங்கதைச் செய்திகள் முன்பே, வழங்கி வந்தன; மணிமேகலையில்,

'கொடிக்கோ சம்பிக் கோமகன் ஆகிய வடித்தேர்த் தானை வத்தவன் றன்னே வஞ்சஞ் செய்துழி வான்ற8ள விடீஇய உஞ்சையிற் ருேன்றிய யூகி யந்தணன் உருவுக் கொவ்வா வுறுநோய் கண்டு பரிவுறு மக்களின்’

என்று வந்துள்ள செய்தியைக் காண்க.

வச்சத் தொள்ளாயிரம் என்ற தமிழ் நூலொன்று. இருந்தது. அதற்கும் உதயணனைப்பற்றிய வரலாற்றுக் கும் இன்ன தொடர்பு உண்டென்று வரையறுத்தற்குரிய கருவிகள் இப்போது இல்லை.

பெருங்கதையை உதயணன் கதை என்றும், கதை என்றும், கொங்குவேள் மாக்கதை என்றும் வழங்குவர். சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்னும் பெருங் காப்பியங்களோடு ஒருசேர வைத்து இக் காப்பியத்தைப் பாராட்டினர். -