பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 239

பிற்காலத்துக்குரிய யாப்பாக இருத்தலே சான்று. இந்நூல் முற்றும் இப்பொழுது கிடைக்கவில்லை.

சிலப்பதிகாரத்தில் அடியார்க்குநல்லார் உரையில் மேற்கோளாக வரும் வளையாபதிச் செய்யுள் ஒன்று உண்டு. -

"துக்கம் துடைக்கும் துகளறு காட்சிய

நிக்கந்த வேடத் திருடி கணங்களே ஒக்க அடிவீழ்ந் துலகியல் செய்தபின் அக்கதை யாழ்கொண் டமைவரப் பண்ணி” என்பது அது. இச்செய்யுளிலிருந்து இந்நூல் ஜைன மதச் சார்புடையதென்று தெரியவருகின்றது."

வைசிய புராணத்தின் 85-ஆம் படலத்தின் பெயர், "பஞ்சகாவியத் தலைவரில் வைரவாணிபன் வளையாபதி பெற்ற சருக்கம்’ என்பது, அது 49 விருத்தங்களால் ஆகியது. அதில் உள்ள கதை வருமாறு :

திசை முற்றும் புகழைக் கொண்ட ஈகையை உடைய வனும், சிவபிரானது பஞ்சாட்சரத்தை உருவேற்றும் நாவை உடையவனும், பாண்டியனை வென்றவனும், வக்குவ மஹரிஷி கோத்திரத்தில் உதித்தவனும், வயிர வாணிகனும், தேவேந்திரனைக் காட்டிலும் மிக்க வாழ்வுள்ளவனும், விற்பிடி மாணிக்கத்தினுவே விளங்கிய மேன்மையை உடையவனும், நற்குணம் உடையவனும் ஆகிய நவகோடி நாராயணனென்றும் வைசியன் ஒருவன் சொற்புலவோர் மிகத் துதிக்க வாழ்ந்து வந்தான்.

இருமரபும் தூயவளுகிய அவ் வைசியன் தன் குலத் தில் ஒரு பெண்ணை மணந்து அன்னிய குலத்திலும்

1. சிலப். 9: 13, உரை. 2. புறத்திரட்டு, நூன்முகம், ப. 11i பார்க்க