பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 241

புடன் வளர்ந்து வந்தான். அவனுடைய தாய் அவனைப் பாதுகாத்து ஐந்து பிராயம் புக்கவுடன் பள்ளிக்கூடத்தில் வைத்தாள்.

'வைத்திடப் பள்ளி தன்னில்

வடமொழி கன்ன டஞ்சீர்ச்

சித்திரத் தமிழி ளுேடு

தெலுங்கிவை முதல வான ஒத்தபா டைகள இனத்தும்

உணர்ந்து நால் தவதா னங்கள் பத்தியாய்ச் செய்ய வல்ல

பண்டிதத் தன்மை பூண்டான்.” அவன் இவ்வாறு வளரும் நாளில் புறநாட்டிற்கு வாணிக நிமித்தம் சென்றிருந்த வைர வாணிகன் பெருஞ் செல்வத்தோடு வந்து தன் முதல் மனைவியோடு இன்புற்று வாழ்வா னுயினுன்.

ஒரு நாள் காளியருளால் வளர்ந்த பிள்ளை, தோழ ரோடு கூடிக்கொண்டு வணிகர் தெருவிற் போய்ப் பந்தாடல் முதலிய விளையாட்டைச் செய்து வரும்போது அங்கே ஒரு பையன் அவனைக் கண்டு, உன் தந்தையை நீ அறியாய்” என்று உரைத்தான். அப்போது அக் குமரன் மிக வெகுண்டு பெருந்து ரம் கொண்டு தன் மனை புக்குத் தாயிடம் அப் பையன் கூறியதை மொழிந்து, "எனக்கு என் தந்தை யார் - என்பதை விளங்கச் செய்யாவிடின் என் உயிரை விடுவேன்' என்ருன். அது கேட்ட தாய் அவனுக்கு உண்மை கூறி, "என்னை நற்குலப் பெண் அல்லள் என்று உன் தந்தை தள்ளிவிடினும் காளி தேவி அருள் புரிந்தமையின் நன்மை உண்டாகும் என்று நம்பி விாழ் கிறேன்' என்ருள். .

இவற்றைக் கேட்ட அவ் விளங்குமரன் தன்னுடைய தாயினுல் தன் தந்தை காவிரிப் பூம்பட்டினத்தில் வாழும்

த. கா-16 -