பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தமிழ்க் காப்பியங்கள்

வணிகன் என்பதை அறிந்து அவள் கூறிய அடை யாளங்களையும் தெரிந்துகொண்டு புகார் நகரம் புகுந் தான். புகுந்து தன் தந்தையின் கடைக்குமுன் சென்று அவனை நோக்கி, "நான் உம்முடைய முதற் குமரன்" என்று சொன்னன். -

வைர வாணிகன் அந்தச் சொல்லைக் கேட்டு அதட்டிப் பார்த்து, "எங்ங்னம் இவ்வுறவு வந்தது? சொல்” என்ருன். அம் மைந்தன் தாயில்ை அறிந்த செய்திகளைக் கூறி,

"கிகளஞர்கள் உரைத்த சொல்லக்

கேட்டுநீர் மதியி ழந்தீர் இளைஞர்கள் விசாரம் போல

இருந்ததும் மதியே’

என்று இடித்துரைத்தான். அது கேட்ட வணிகன், "இழிகுலப் பெண்ணைக் கொண்டதுண்டேனும் அவள் பால் கருப்பம் உண்டாகியதை அறிந்தோம் இல்லை' என்று மனங் கலங்கிச் சேவகர்களை அழைத்து அச்சிறு குமரனைத் துரத்தத் தொடங்கினன். வணிக குலத்தினர் பலரிடம், "இவன் யாரோ, இங்கே வந்து அழி வழக்குப் பேசுகின்ருன்' என்ருன். இவற்றையெல்லாம் கண்ட குமரன், 'யான் உம்முடைய பிள்ளை என்பதற்குக் காளி தேவியே சான்று கூறுவாள்' என்று சொல்ல, வைசியர்கள், அங்ங்ணம் தக்க சான்று இருக்குமேல் இவ் வழக்கு ஆராய்வதற்குரியது. நீ போய் உன் சாகூழியை அழைத்து வா' என்றனர்.

இளங் குமரன் தாயின் பால் வந்து நிகழ்ந்தவற்றைக் கூற, அவள் தன் தனயனை அழைத்துச் சென்று காளி கோயில் புகுந்து வணங்கினள். காளி, நீங்கள் அங்கே சென்று என்னை நினைக்கும்பொழுது நான் அங்கே வந்து நிற்பேன். உங்களுடைய தூய்மையை நிலை நிறுத்தி உங்களுக்குரிய வாழ்வையும் பெறச் செய் வேன்' என்று அருள் செய்தாள்.