பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் - 243

தாயும் தனயனுடனே வணிகர் சபையின்கண் வந்து, "என்பால் பிழை ஏற்றுதல் நியாயம் அன்று. இவ் வணிகர்பிரான் என்னை நீத்தபொழுதே என் வயிற்றில் இக் குமரன் கருவில் இருந்தான். இந்த உண்மையைக் காளி தேவி அறிவாள்' என்று சொன்னுள்.

"இதனைக் காளியே வந்து சொன்னுல் நாங்கள் உடம்படுவோம்’ என்று வணிகர் உரைத்தனர். அப் பொழுது காளி வானத்தில் எழுந்து வந்து, 'இவ் விருவரும் வைர வாணிகளுகிய உனக்கு உரியவர்களே” என்று அருளிச் செய்தாள்.

வணிகர் அதுகேட்டு வியந்தனர். வைர வாணிகன் தன் குமரனையும் மனைவியையும் ஏற்றுக்கொண்டான்; குமரனுக்குரிய பொருட் பகுதியைக் கொடுத்து வியாபாரம் செய்யச் சொன்னன்.

இங்ங்னம், கார்வணிகன் தெளிசேர் புகழ் செய்த திறங்களினுல் வளையாபதி ஒன்று வகுத்தனர்.

வைசிய புராண வரலாறு இங்ங்ணம் முடிகின்றது. குண்டலகேசி முதலிய கதைகளைப் போலவே இவ் வர லாறும் வளையாபதி என்னும் காப்பியத்தின் தொடர்பு எள்ளளவேனும் இல்லாமலே அமைந்தது என்று கொள்ளுதலே தகுதியாகும். ஒருகால் வளையாபதியின் வரலாற்றிற் காவிரிப்பூம்பட்டினத்தின் சம்பந்தம் இருத் தல் கூடும்.

சூளாமணி

ஜைன காப்பியங்களில் விருத்த யாப்பில் உள்ள

நூல்களுள் நல்ல நடை அமைந்தது சூளாமணியாகும். இதனை இயற்றியவர் தோலாமொழித் தேவர் என்பவர்