பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 தமிழ்க் காப்பியங்கள்

அருங்கலான்வயம் என்னும் கொத்தைச் சேர்ந்த நூல் இதுவென்றும், 9-ஆம் நூற்ருண்டில் இயற்றப் பெற்ற தென்றும் சில அறிஞர் கூறுவர்.

இந்நூல் பாயிரத்தில், இதனை அரங்கேற்றிய அவை இன்னது என்று ஒரு செய்யுள் கூறுகின்றது

"நாமாண் புரைக்கும் குறையென்னினும்

நாம வென்வேல் தேமாண் அலங்கல் திருமால்நெடுஞ்

சேந்தன் என்னும் தூமாண் தமிழின் கிழவன்

சுடரார மார்பிற் கோமான் அவையுள் தெருண்டார்கொளப்

பட்ட தன்றே' என்பது அச் செய்யுள். இதன்கண் சுட்டப் பெற்ற சேந் தன் என்பவன் அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் அரசனுக இருக்கக் கூடுமென்றும், இந் நூலின் காலம் ஒன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதி என்று கூறலா மென்றும் பூரீ க. அ. நீலகண்ட சாஸ்திரியார் தம் சோழர் வரலாற்றில் எழுதியுள்ளார்." . .

இது சிந்தாமணிக்குப் பின்னர் இயற்றப்பெற்ற தாகல் வேண்டும். சிந்தாமணிச் செய்யுள் நடைக்கும் இந்நூற் செய்யுள் நடைக்கும் உள்ள வேறுபாடு இக் கருத்தை உண்டாக்குகின்றது. சிந்தாமணியின் விருத்த யாப்பு இடையிடையே தடைப்பட்டுச் செல்லுகின்றது. சூளாமணியோ செப்பமுற்ற நடையோடு விளங்குகிறது. இந் நூல் பெருங் காப்பியத்துக்குரிய இலக்கணங்கள் அமைந்தது. -

1. சூளாமணி, பாயிரம், 4. 2. Oholas, Vol. II. pp. 510, 544,