பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 245

இதனை 1889-ஆம் ஆண்டில் சி. வை தாமோதரம் பிள்ளையவர்கள் அச்சிட்டார்கள். 1954-ஆம் ஆண்டில் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடாக ஒரு பதிப்பு வெளியாகியிருக் கிறது.

நீலகேசி

நீலகேசி யென்பது குண்டலகேசிக்கு எதிராக எழுந்த நூல். இதனை இயற்றியவர் பெயர் அறியப்பட வில்லை. இதற்குச் சமய திவாகர வாமன முனிவர் என்பவரால் இயற்றப்பெற்ற உரை ஒன்று உண்டு. இதற்கு நீலகேசித் திரட்டு, நீலகேசித் தெருட்டு என்னும் வேறு பெயர்களும் வழங்கும்.

இது குண்டலகேசியிற் கண்ட வாதத்துக்குப் பிரதி வாதமாக இயற்றப் பெற்றது. ஆயினும் ஆசீவகர் முதலி யவர் மதங்களை மறுக்கும் பகுதிகளும் இதில் உள்ளன. . குண்டலகேசி வாதச் சருக்கம், அருக்கசந்திர வாதச் சருக்கம் என்பன போல அமைந்த சருக்கப் பெயர்களே இது வாத நூல் என்பதைத் தெரிவிக்கும். ஆயினும், இதனைக் காப்பியம் போலத் தோன்றும் வகையில் கதை யாக்கியிருக்கிருர் ஆசிரியர். நீலகேசி என்பவள் உயிர்க் கொலை புரியும் இயல்பினளாக இருந்து, ஒரு முனிவருடைய உபதேசம் பெற்றுப் பின்பு ஜைன சமயத்திற் புக்கு, அச் சமய அறிவில் தேர்ச்சி பெற்று மற்றச் சமயவாதிகளோடு வாதம் புரிகிருள்.

நூலின் தொடக்கத்தில் பாஞ்சால நாட்டின் சிறப்பும், புண்டவருத்தனம் என்னும் நகரத்தின் சிறப்பும் உள்ளன. நாட்டுச் சிறப்பில் ஐந்து திணை களையும் வருணிக்கிருர் ஆசிரியர். இவை இந்நூலின் முகப்பை ஒரு காப்பிய முகப்பைப் போலத் தோன்றச்