பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தமிழ்க் காப்பியங்கள்

செய்கின்றன. பத்துச் சருக்கங்களும் 894 செய்யுட் களும் அடங்கிய இந் நூலையும் சமய திவாகர வாமன முனிவருடைய உரையையும் பேராசிரியர் பூரீ அ. சக்கர வர்த்தி, எம்.ஏ. அவர்கள் 1936-ஆம் ஆண்டில் பதிப்பித் திருக்கிருர். இதன் காலம் கிட்டத்தட்ட ஐந்தாம் நூற். ருண்டாக இருக்கலாம் என்பது அவர் கருத்து.'

பிற காப்பியங்கள்

இந் நீலகேசியோடு ஒரு நிகரனவாக யாப்பருங்கல விருத்தியாசிரியராற் சொல்லப்படும் பிங்கலகேசி, அஞ் சனகேசி, காலகேசி என்பனவும் நீலகேசியைப் போலவே கதை வடிவில் தொடங்கிச் சமயக் கொள்கைகளை அறி வுறுத்துவன என்று கொள்ளலாம். பிங்கலகேசியின் தோற்றமும் தொழிலும் பிங்கலகேசி யென்னும் தொடர் நிலைச் செய்யுளிற் சொல்லப்பட்டன என்று தெரிகிறது. இந்தக் கேசிகள் யாவும் சமய இலக்கண நூல்களின் மாறுவேடங்கள் என்று கூறுவதே தகும்."

அமிர்தபதி என்பது ஒரு நூற் பெயர். இதன் முதற் பாட்டு, சிந்தாமணியைப்போல வண்ணத்தால் வந்த தென்று தெரிகின்றது. அச் செய்யுளின் முதலடி,

'குற்றங்கள் மூன்றும் இலணுய்க் குணங்கட் கிடனுய்'

என்பது. இதன் பொருளால் இது ஜைன காவிய மென்றே கருதற்குரியது.

1. Introduction to Neelakesi, p. 8.

2. உபசார வழக்கினுல் குண்டல நீல பிங்கல கேசிகளது தோற்ற

மும் தொழிலும் சொன்ன இலக்கணச் செய்யுட்களும் பிரிந்து, வேருேர் உபசாரத்தில்ை குண்டலகேசி, நீலகேசி, பிங்கலகேசி எனப் பெயர் பேற்ரு ற் போல'. யா. வி. ப. 40.