பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 தமிழ்க் காப்பியங்கள்

முதலாக 1908-ஆம் ஆண்டில் தில்லையம்பூர் வேங்கட ராமையங்காரால் வெளியிடப் பெற்றது.

உதயண குமார காவியம் என்பது நடைச் சிறப் பில்லாத நூல். ஐயரவர்கள் கலைமகள் வெளியீடாக இதை வெளியிட்டிருக்கிருர்கள். நாக குமார காவியம் என்பது இன்னும் அச்சிடப்படவில்லை. -

புறத்திரட்டால் மாத்திரம் தெரியவரும் தொடர் நிலைச் செய்யுள் நாரத சரிதை என்பது. பூரீ புராணத்தில் நாரதன் என்றவன் வரலாறு வருகிறது. அவனைப் பற்றிய சரிதையாக இச் செய்யுள் நூல் இருக்கலாம்.

என்பர்.'

இதிகாச புராணங்கள்

பெளத்த ஜைன சமயங்களில் உள்ள பழைய வர லாறுகள் தமிழ்க் காப்பியங்களாகப் புலவர் பெரு மக்களால் அமைக்கப்பட்டது போலவே, நாளடைவில் இதிகாச புராணங்களும் சைவ வைணவ சமயப் பற்றுடைய கவிஞர்களால் தமிழில் செய்யுள் உருவத்தில் ஆக்கப்பட்டன. பெரிய இதிகாசங்களாகிய இராமாயண மும் பாரதமும் சங்க காலத்திலே வழங்கினவெனினும் நாளடைவில் அவை வழக்கொழிந்தன. அதனல் புதியவை எழுந்தன போலும்; அன்றித் தம் தம் கருத்துக்களுக்கு ஏற்ப அவற்றைப் பாடவேண்டும் என்னும் அவாவினுல் கவிஞர்கள் புதிய இராமாயண பாரதங்களை இயற்றினரென்றும் கொள்ளலாம்.

மகா புராணங்கள் பதினெட்டு. அவற்றிற் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தல புராணங்

1. புறத்திரட்டு, நூன்முகம், ப. ziv.