பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 249 .

கள் பல மொழிபெயர்க்கப்பட்டன. அத் தல புராணங் களைக் கணக்கெடுப்பதெனின் அது மிக விரியும்.

பாரத வெண்பா

ஒன்பதாம் நூற்ருண்டில் பெருந்தேவனுர் என்னும் ஒருவரால் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகப் பாரத வெண்பா என்னும் நூல் இயற்றப்பட்டது. சங்க காலத்தில் இருந்த பாரதம் இயற்றிய புலவருடைய பெயரையே இந்நூலாசிரியர் உடையவராயினும், அந்நூற் செய்யுட்களுக்கும் இந் நூற் பாடல்களுக்கும் பல வகையில் வேற்றுமை உண்டு. வெண்பா, ஆசிரியம் என்னும் இருவகைப் பாவும் இதன்கண் உள்ளன. இடையிடையே உள்ள உரைப் பகுதிகள் வடமொழிச் சொற்கள் மிகுதியாக விரவப்பெற்று அமைந்துள்ளன. செய்யுட்களிற் பல இழுமென நடைபெறலின்றியும், பொருட்செறிவின்றியும் உள்ளன. இப் பாரத வெண்பா தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்துச் செய்யப் பெற்றது. அவன் கி. பி. 880 முதல் 854 வரையில் ஆண்டவன். எனவே, இந்நூலும் அக் காலத்தே இயற்றப்பெற்றிருத்தல் வேண்டும். அவ்வொன்பதாம் நூற்ருண்டிலேயே சங்க காலத்தில் இயற்றப்பெற்ற பாரதம் வழக்கு வீழ்ந்ததுபோலும்.

அருணிலே விசாகர் பாரதம் பதின்மூன்ரும் நூற்ருண்டின் தொடக்கத்தில் அருணிலை விசாகர் என்பவர் பாரதத்தைத் தமிழ்ப் படுத்தினர் என்ற செய்தி சாஸ்ன வாயிலாகப் புல கிைன்றது. அருணிலை விசாகர் என்பவர் தொண்டை

1. சானைத் தமிழ்க்கவி وفاع 4ة ப. 24.