பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 தமிழ்க் காப்பியங்கள்

நாட்டில் சென்னைக்கு அருகில் உள்ள அரும்பாக்கம் என்னும் ஊரினர். அவரை அருணிலை விசாகன் திரைலோக்யமல்லன் வத்ஸ்ராஜன்' என்று சாஸனம் கூறும்.'

வில்லிபுத்துரார் பாரதம்

14-ஆம் நூற்ருண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்த வில்லிபுத்துாரார் வடமொழியில் அகஸ்திய பட்டர் என்பவர் செய்த பாரதத்தை மொழிபெயர்த்தும் சில இடங்களிற் பெருக்கியும் ஒரு பாரதத்தை இயற்றினர். வில்லிபாரதம் என்று தமிழ் நாட்டில் பெருவழக்காக வழங்குவது இப் பாரதமே யாகும். இதன் செய்யுள் நடை வடமொழிக் கலப்புடையது. பிறர் யாராலும் ஆள்வதற்கரிய சந்தங்கள் பலவற்றை இவர் ஆள்வர். அருணகிரிநாதர் முதலியோர் சந்தங்கள் பலவற்றைப் பாடியுள்ளார்கள் எனினும் அவர்களுடைய செய்யுட் களில் பாட்டின் சந்தத்துக்கேற்பப் பொருள் அமைக்கப் படுகின்றது. அங்கே பொருள் சந்தத்தைப் பின்பற்று. கின்றது. பாரதத்திலோ ஒரு கதையைத் தொடர்பு படுத்திக் கூறவேண்டிய வரையறை அமைந்துவிட்டமை யின் அப்பொருளைச் சந்தம் பின்பற்றவேண்டும். அங்ங்ணம் பாடுவது அருமையாகும். வில்லிபாரதத்தில் பருவம் என்ற பேருறுப்பும், சருக்கம் என்ற சிற்றுறுப்பும் வந்தன. -

பிற பாரதங்கள்

வில்லிபுத்தூரார் பாரதக் கதையைச் சுருக்கமாகப் பாடியிருக்கின்ருர். பல கிளைக் கதைகளையும் பாரதத்தின் இறுதிக் கதையையும் அவர் பாடாமல் விட்டுவிட்டார்.

1. هrغ فيقع غر سهمه கவி சரிதம், ப. 90.