பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் n53

செய்யப் புகுந்தவராதலின், அவருடைய முயற்சி ஒரு வழி காட்டியாக நிற்கின்றது. எனவே, சிந்தாமணியின் செய்யுள் அமைப்பை வர்ண ந் தீற்ருத சித்திரமாகச் சொல்லலாம். அதன்பின் எழுந்த சூளாமணியோ இனிய செய்யுள் நடையை உடையது. அதன் நடை வண்ண ந் தீற்றிய சித்திரமாகத் திகழ்கின்றது. பொருட் சிறப்பும் சிறந்ததே. சீவக சிந்தாமணியைப் போலவே சூளாமணி யிலும் இறுதிப் பகுதியில் ஜைன மதக் கொள்கைகள் விளக்கப்படுகின்றன. ஆயினும் சிந்தாமணியைக் காட் டிலும் சிறிதளவு குறைவாகவே ஸ்ளது.

இத்தகைய சிறு குறைகளையும் கடந்து முற் காலத்துப் புலவர் வளர்த்து வந் த பொருள் நெறியும் சொல் நெறியும் கலந்து சிறந்த செய்யுள் நெறியோடு பிற்காலத்தாருக்குப் பெரிய உரையாணியாகத் திகழ்வது கம்ப ராமாயணம். அந் நூல் தமிழுக்குத் தனிச் சிறப்பைத் தந்தது. அதன் காலத்தைக் குறித்து இரு வேறு கொள்கைகள் தமிழ் நாட்டில் நிலவுகின்றன. 9-ஆம் நூற்ருண்டென்று ஒரு சாராரும், 12 அல்லது 13-ஆம் நூற்ருண்டென்று ஒரு சாராரும் கூறுவர்.

கம்ப ராமாயணத்துக்குப் பின்னர் எழுந்த காப்பி யங்களில் அதைேடு ஒப்ப வைத்து எண்ணுதற்குரியது வேறு ஒன்றும் இல்லை.

சமீப காலத்தில் சிலர் சில இராமாயணங்களை இயற்றியிருக்கின்றனர்.

புராணங்கள் புராணங்களுள் பாகவதம் இருவரால் தமிழில் இயற்

றப்பட்டது. இருவரும் வேறு வேறு காலத்தவர். ஒன்றை இயற்றியவர் வேம்பத்தூர்ப் புலவராகிய செவ்வைச்