பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய ఇబఉతuశఉir 255

வீர சைவர்களுக்குரிய பிரபுலிங்க லீலை, வீரசிங்காதன :புராணம் என்பன தொடர்நிலைச் செய்யுட்களே யாயினும் பெருங் காப்பியங்கள் ஆகா. -

தமிழில் இதிகாச புராணங்களில் உள்ள கிளைக் கதை கள் சில காப்பியங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நளவெண்பா, நைடதம், அரிச்சந்திர புராணம், குசேலோபாக்கியானம் முதலிய நூல்கள் இவ் வகை யைச் சார்ந்தவையே. நளவெண்பாவின் பின் இரண்டடி கள் பல விடங்களில் நின்று பயனின்மைக் குற்றத்துக்கு உரியனவாகும். அவற்றில் எதுகை சிறக்கவேண்டி அடைகளை விரவ வைக்கிறர் ஆசிரியர். நைடதம் சிறந்த காப்பியம். அதன் நடை மிக அழகியது. சீவக சிந்தாமணி முதலிய பழங் காப்பியங்களில் கண்ட மரபை அந் நூலாசிரியர் நன்கு எடுத்தாண்டிருக்கின்றர். ஆயினும் முற்பகுதியில் உள்ள விரிவு பிற்பகுதியில் இல்லை. "வேட்டைநாய் பாய்வது போல இருக்கிறது' என்று அதன் கதியைப்பற்றி ஒருவர் சொன்னதாக ஒரு கதை வழங்குகிறது. -

தல புராணங்கள்

இப்பொழுது தமிழில் உள்ள தொடர்நிலைச் செய் யுட்களில் பெரும் பகுதி தல புராணங்களாகவே உள்ளன. நாட்டில் சமய உணர்ச்சி அதிகப்படப்படத் தல வழிபாடும் அதிகமாயிற்று. தலச் சிறப்பைப் பல வழியிஞலும் வெளிப்படுத்த எண்ணிய புலவர்கள் புராணங்களும் பிரபந்தங்களும் பாட ஆரம்பித்தனர். . காப்பியங்களுக்குரிய வருணனைகளைப் பல புலவர்கள் புராணங்களில் அமைத்து அழகுபடுத்தினர். ஆயினும் அவற்றைப் பெருங் காப்பியங்கள் என்று சொல்வது ஏற்புடையதன்று.