பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 தமிழ்க் காப்பியங்கள்

தல புராணக் காதல் தமிழருக்கு மிக அதிகமாக இருந் தது. அதல்ை ஒரு தலத்திற்கே பல புராணங்கள் .ண்டாயின. சிதம்பர தலம்பற்றி மூன்றுக்கு மேற் பட்ட புராணம் இருக்கின்றன. இங்ங்ணம் அமைந்த புராணங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. தல புராணம் இயற்றுவதில் வைணவர்களுக்கு அத்துணை ஆர்வம் இருந்ததாகத் தெரியவில்லை. சைவர்கள் அத்துறையில் பேருக்கம் கொண்டிருந்தார்கள். சிதம்பரம், மதுரை முதலிய சிவ தலங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புராணங்கள் இருக்கவும், கோயிலென்று சிறப்பித்துப் பாராட்டப் பெறும் திருவரங்கத்துக்குத் தமிழ்ச் செய்யுள் உருவத்தில் ஒரு புராணமேனும் இருப்பதாகத் தெரிய வில்லை. பிற்காலத்தில் விலக்ஷண கவி இராமாநுச நாவலர் என்பவர் திருமாலின் பெருமையைக் கூறும் சில புராணங்களை இயற்றியுள்ளார்.

புராண காப்பியங்கள் பலவாயினும் அவற்றைப் பாடிய ஆசிரியர்களுடைய கவித்துவ சக்திக்கு ஏற்ப அவை சிறப்பை அடைகின்றன. பரஞ்சோதி முனிவ ருடைய திருவிளையாடற் புராணமும், கருணைப் பிரகாசரும் அவருடைய சகோதரர்களும் பாடிய சீகாளத்திப் புராணமும், இவற்றைப் போன்ற வேறு சில புராணங் களும் தமிழ் நயம் அறிவோரால் விரும்பிப் படிக்கப் படுகின்றன. திரிகூடராசப்பக் கவிராயர், கவி வீரராகவ முதலியார், எல்லப்ப நாவலர், சிவஞான சுவாமிகள், கச்சியப்ப முனிவர், மீனுட்சிசுந்தரம் பிள்ளை என்னும் புலவர் பெருமக்கள் இயற்றிய புராண நூல்கள் உயர்தர tíðirSjr6ð6ðl -

r . சரித்திரக் காப்பியங்கள் -

அரசர், அன்பர் முதலியோருடைய சரித்திரங்களை உரைக்கும் தொடர்நிலைச் செய்யுட்கள் சில தமிழிலே