பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கியங்கள் 257

உண்டு. அவற்றில் புனைத்துரையும் கற்பனையுமே அதிக மாக இருக்குமாதலின் முழுப் பகுதியும் சரித்திரத்தை அறிவதற்கு உதவும் என்று கொள்ளுவதற்கு இல்லை.

பெரிய புராணம் பல அன்பர்களுடைய சரித்திரத் தைத் தொகுத்துக் கூறும் காப்பியம் ஆகும். அதில் சேக்கிழார் சரித்திரச் செய்திகளைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் ஓரளவு குறிப் பாகப் புலப்படுத்துகிருர். இராசராச விஜயம், வீரனுக்க விஜயம், குலோத்துங்க சோழ சரிதை, சீவலமாறன் சரிதை, என்பன சரித்திரக் காப்பியங்கள். வைணவ ஆழ்வார் களது சரிதையைக் கூறும் குருபரம்பரையையும் அரபத்த நாவலர் சரிதையையும் இவ் வகையிலே சேர்க்கலாம்.

மொழிபெயர்ப்புக்கள்

வடமொழியிலும், பிற மொழிகளிலும் உள்ள காப்பி யங்களை மொழிபெயர்த்து அமைத்த நூல்கள் சில தமி ழில் இருக்கின்றன. மனு சரிதை வசு சரிதை, என்பன தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. பிரபுலிங்க லில் கன்னடத்திலிருந்து துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளால் மொழிபெயர்க்கப்பட்டது. வட மொழிக் காதம்பரியை மொழிபெயர்த்து ஒரு புலவர் தமிழ்ச்செய்யு. ளாக்கியிருக்கின்ருர்; இது வெளியாகியிருக்கிறது. -

1. இவற்றில் சீவலமாறன் சரிதை மாத்திரம் இப்போது கையெழுத் துப் பிரதியாகக் கிடைக்கும். மற்றவை மறைந்தன. -

2. இதுவும் கையெழுத்துப் பிரதியாக உள்ளது; அச்சிடப்படவில்லே,

.8. அரசாங்கத் சொன்னூல் ரிலேய வெளியீடு,

த. கா.-17 - -