பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 தமிழ்க் காப்பியங்கள்

புதுக் காப்பியங்கள்

இக்காலத்தில் பலர் பல தொடர்நிலைச் செய்யுட் களை இயற்றி வருகின்றனர். தல புராணங்களையும் பிரபுக்கள் சரிதைகளையும் சிலர் இயற்றியிருக்கின்றனர்; ஆங்கிலத்திலுள்ள மில்டனரது பாரடைஸ் லாஸ்ட் (Paradise ost) என்பதைச் சுவர்க்க நீக்கம் என்னும் பெயரால் வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியா ரவர்கள் மொழிபெயர்த்திருக்கின்றனர். அவர் அகலிகை யின் வரலாற்றை அகலிகை வெண்பா என்னும் தொடர் நிலைச் செய்யுளாக அமைத்தனர்.

திருவனந்தபுரம் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை இயற் றிய மனுேண்மணியம் நாடகக் காப்பியமாகும். அது ஆங்கில முறையைப் பின்பற்றி எழுதப்பெற்றது; கதையமைப்பும் பாத்திரங்களின் குணசித்திரங்களும் நன்கு அமைந்த நாடகச் செய்யுள்.

இராமநாதபுரம் மகாவித்துவான் பாஷா கவிசேகரர் ரா. ராகவையங்காரவர்கள் வடமொழிச் சாகுந்தலத்தை மொழிபெயர்த்திருக்கின்றனர். பாரியின் வரலாற்றைப் பr காதை என்னும் தொடர்நிலைச் செய்யுளாக ஆக்கி யிருக்கின்றனர். அது வெண்பாக்களால் ஆகியது. இவற்றில் பழைய காலத்து மரபும் நடையும் அமைப்பும் விரவியிருக்கின்றன .

சுப்பிரமணிய பாரதியார் பாடிய பாஞ்சாலி சபதம் இசைப் பாட்டுக் கலந்த தொடர்நிலைச் செய்யுள். அவர் தமக்கென வாய்த்த இணையற்ற கவித்துவத்தில்ை புதிய புதிய கவியழகுகளையும் கருத்துக்களையும் அதில் காட்டி