பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

பழமையும் புதுமையும்

பண்டைக் காலத்துக் காப்பியங்களின் வளர்ச்சிமுறை

இதுகாறும் ஆராய்ந்த செய்திகளால் தமிழில் தொன்று தொட்டே பொருட்டொடர்நிலைச் செய்யுட் களும் அவை சம்பந்தமான இலக்கண நூல்களும் விரிந் திருந்தன என்பது வெளியாகும். இன்சுவையும் நன் னடையும் வாய்ந்த செய்யுட்களையுடைய பழங்காப்பி யங்கள் பல வழக்கு ஒழிந்தன. தொல்காப்பியர் காலத் துக்கு முன்பு இருந்த தொடர்நிலைச் செய்யுட்களின் பெயர்கூட நம்மால் அறியப்படவில்லை. ஆயினும் அப் பழம் பேரிலக்கண நூலில் அமைந்த விதிகளின் வாயி லாக காப்பிய இலக்கியங்கள் அந் நூலுக்கு முற்பட்டே வழங்கின வென்பதும் அவை பலவேறு வகைப்பட்டும் பல்கின வென்பதும் கொள்ளக் கிடக்கின்றன.

தொல்காப்பியத்திற்குப் பின்னரும் பல இலக்கியங் கள் உண்டாயின. அவையும் நமக்குக் கிடைத்தில. இப் பொழுதுபெயரளவில் உணரப்படும் பழங்காப்பியங்களில் முன் வரிசையைச்சேர்ந்தனவாக இராமாயணம், பாரதம், தகடுர் யாத்திரை என்பவற்றைக் கூறலாம் அவற்றில் சில செய்யுட்களையன்றி நூல்கள் முற்றும் கிடைக்க வில்லை அவற்றின் பின் எழுந்த காப்பியங்களுள்