பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையும் புதுமையும் 263

ஜைனரும் பெளத்தரும் சைவரும் வைணவரும் கொண்டாடுகின்றனர்; கோயிலமைத்து வழிபடுகின்ற னர். வஞ்சிக் காண்டம் கண்ணகி பத்தினித் தெய்வ மாகிப் பாரோரால் வழிபடப் பெற்ற கதையைச் சொல்லுகிற்து. -

திருவள்ளுவரும், கம்பரும் நடுநிலையில் நின்று கவி பாடுபவர்களாதலின் அவர்களை இளங்கோவடிகளோடு ஒருங்கு எண்ணலாம். புதுமைக் கவியாகிய சுப்பிரமணிய பாரதியார், -

'யாமறிந்த புலவரிலே கம்பனப்போல்

வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்

உண்மைவெறும் புகழ்ச்சி இலை’

என்று பாடுகிருர். இம் மூவரையும் ஒருசேர வைத்துப்

பாராட்டுதற்குக் காரணம் இம் மூவரும் நடுநிலை வழி

நின்று நூல் இயற்றிய பெருமையே போலும். பிற புலவர்களுடைய சமயத்தை வரையறுத்துக் கூறும்

ஆராய்ச்சியாளர் இம் மூவர் சமயத்தையும் வரையறுக்க

இயலாமல் இன்னும் வாதிட்டுக் கொண்டிருத்தலே

இதற்கு ஓர் அடையாளமாகும். -

மணிமேகலையின் அமைப்பு

இளங்கோவடிகளோடு நண்புடையோரும் நல்லி சைப் புலமை வாய்ந்தவருமாகிய சீத்தலைச் சாத்தனர் தாம் இயற்றிய மணிமேகலையிலே சமய உணர்ச்சியை மிகுதியாகக் காட்டியிருக்கின்ருர். அந்நூலின் பின் காதைகள் முற்றும் புத்த சமயக் கொள்கைகளுக்கு உயர்வு கற்பிக்கவே எழுந்தன. இளங்கோவடிகளும்