பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தமிழ்க் காப்பியங்கள்

பழங் கோயிலை நம் கண்முன் நிறுத்துகின்ருர். அந்தக் கோயில் வருணனையை யாவரும் அறிந்து மகிழ்வதில் என்ன தடை இருக்கிறது? - х

சிந்தாமணியில் தொடங்கிய விருத்த யாப்பு

சிந்தாமணிக்குப்பின் தமிழ்க் காப்பிய உலகில் ஒரு பெரிய மாறுதல் உண்டாயிற்று. சங்க காலத்திலும் அதனைச் சார்ந்து சில காலத்திலும் புலவர்களால் எடுத் தாளப்பெற்ற ஆசிரியப்பாவைக் கவிஞர் கைவிட்ட்னர். ஓசை நயத்திலும், சந்தத்திலும் மனம் புகுந்தது. வட மொழி நூல்களில் பல வேறு வகையாக வழங்கும் விருத்த யாப்பைப் போலத் தமிழிலும் பலவகையான விருத்தங் களிலே நூலமைக்கும் வழக்கம் ஆரம்பமாயிற்று. ஒரே மாதிரியான அகவற்பாக்களிலே கதையைச் சொல் வதைக் கவிஞர் விரும்பவில்லை.

சிந்தாமணி விருத்தக் கவித் திறத்தைக் காட்டா விடினும் விருத்த யாப்பானது காப்பிய உலகில் புகுந்த தற்கு முதல் உதாரணமாக அது விளங்குகின்றது. ஜைன சமயத் துறவியாகிய திருத்தக்கதேவர் பெருங் கதையிலிருந்து சொற் பொருள்களைப் பல விடங்களில் எடுத்துப் பயன்படுத்துகின்றர். பழங்கதையாகிய சிவிகன் வரலாற்றை விரித்துக் காப்பிய மாக்கினர். சமயக் கருத்துக்களைச் சில இடங்களில் சிறிதளவு சொல்லிப் போதுகின்ருர். - .

சமய உணர்ச்சியும் காப்பியக் கதியும்

- - - நீலகேசி முதலிய ஜைன சமயக் காப்பியங்களைக் காப் பியங்களாகக் கருதுவதைக் காட்டிலும் சமய நூல் களாகக் கருதுவதே ஏற்புடையதாகும். அக் காலத்தி