பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையும் புதுமையும் - - 267

லிருந்தே சமய உணர்ச்சி மிகுதியாகக் கவிஞர் உள்ளத் தைக் கொள்ளை கொண்டது. அதனல் கடவுள் வாழ்த்து முதல் இறுதி வாழ்த்து வரையில் இடம் வாய்த்த போதெல்லாம் தம் தம் சமயக் கருத்துக்களைப் புகுத்தி அமைக்கத் தலைப்பட்டனர். -

வடமொழியில் உள்ள அலங்கார இலக்கணங்கள் தமிழில் வரவே, சிலேடை முதலிய சொல்லணிகளும் பல்கின. கடினமான நடையும் திரிபு யமக விசேடங் களும் மடக்கு முதலிய சொல்லலங்காரங்களும் சந்தங் களும் திரிசொற்களும் காப்பியத்தைத் தம்முடைய போக்கிலே இழுத்துச் சென்றன. அதனல் கவிஞ. னுடைய பாவிகம் வரவர இழுக்குற்றது. சிறந்த கருத்துக்களைப் பொது நிலையிலிருந்து சொல்ல வேண்டிய கவிஞன் ஒருபாற் கோடுவாளுகிச் சமயப் பிணக்கின் வழியே சென்று, பிற மதங்களைக் கண்டிக்க வும் தலைப்பட்டான்.

பிற்காலத்தில் எழுந்த புராணங்களில் அவ்வச் சமயத்தின் சிறப்பைக் கூறுவதோடு அமையாமல், பிற சமயங்களை வைது இன்புறும் அமைப்பும் காணப்படு கின்றது. அதற்கெனவே கதைகளிலும் நிகழ்ச்சிகளைக் கோத்தனர். கவிஞர்களின் கற்பனைத் திறனும் சொல். லாற்றலும் கமரில் உகுத்த பால்போல் சமயக் காழ்ப்பில் உகுக்கப்பெற்றன. - - . t

பொருட்சுவை வரவரக் கலங்கியது. அவசியமற்ற இடங்களிலும் சிருங்கார ரஸத்தை மிக மிஞ்சிக் காப்பியத் திலே இயைத்தனர் சிலர். அடிமுதல் நுனி வரையில் பக்தி ரஸத்தையே பெரிதாக்கிக் காப்பியங்களை நிரப்பி வந்தனர் சிலர். ஒழுக்க முறைகளை அறிவுறுத்த வேண்டிய காப்பியங்கள் வெறும் சிருங்கார வருணனை களும் சொல்லடுக்குக்களும் மலிந்தனவாயின.