பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையும் புதுமையும் 269

மணம் நெடுக வீசும்படிப் பாடுவார்கள். சிறந்த புலவர் களே தம்முடைய கற்பனையின் உயர்வாலும் கவியாற்ற லாலும் தாம் வாழும் காலத்தையும் இடத்தையும் அடி யோடு மறந்து புழுதி படாத நெடு வெளியிலே மிக உயரத்தில் பறக்கும் கருடன்ைப்போல உலவுவார்கள். முன்னவர்கள் காலத்துக்கு அடிமையாகிறவர்கள்; பின்ன வர்கள் காலத்தை அடிமையாக்குகிறவர்கள். கம்பர். காலத்தை விஞ்சி நின்றவர். காலம் அவரிடம் தோல்வியுற்றது.

வருங்காலக் காப்பியம்

எளிய நடை, இனிய கதை, அழகிய பாவங்கள், மகா கவியின் மனுேபாவத்திலன்றிப் பிறரால் எட்டிப் பிடிக்க முடியாத கற்பனைகள் ஆகிய இவை அமையும் காப்பியம் ஒன்று இருந்தால் அதுவே இக்காலத்திற்கு மிகவும் பொருந்துவதாகும். மேல் நாட்டாருடைய உறவி ல்ை கவிச் சுவையைப்பற்றிப் புதிய புதிய கருத்துக்களை நாம் அறிகின்ருேம். காப்பிய கதி, அதன் கட்டுக் கோப்பு. பாத்திரங்களின் குண சித்திரம், வருணனைகள் என்பவற்றைப்பற்றியும் பலவற்றைத் தெரிந்துகொள் கிருேம். மனிதனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் நாடகங்களை ஆங்கில மொழியிற் கான் கின்ருேம். சொல்லைக் காட்டிலும் பொருள், யாப்பைக் காட்டிலும் கருத்து கதையைக் காட்டிலும், கதையின் இலட்சியம் சிறந்திருக்க வேண்டும். - . .

இனிமேல் காப்பியம் செய்யப் புகுவார் பழமையில் உள்ள சில முறைகளை மாத்திரம் கைக்கொள்ளலாம். உயர்தர இலக்கியங்களோடு சேர்க்கப்பெற்று வழங்கும் மேல்நாட்டு நாவலைப் போன்ற கதை யமைப்புடைய காப்பியங்களை இயற்றலாம். புதுப்புது யாப்பைக்