பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 தமிழ்க் காப்பியங்கள்

கைக்கொள்ளலாம். சிருங்காரம், பக்தி என்பவற்றை யன்றி வேறுள்ள ரஸங்கள் தெளிவாகப் புலப்படும்படி காப்பியங்களை இயற்றலாம். மனத் தத்துவ ஆராய்ச்சி மலிந்து வரும் இந்நாளில் மக்களின் உள்ள உணர்ச்சி களையும் எண்ணப் போக்கையும் குண நலங்களையும் அறிந்து அமைக்கும் எவ்வகை இலக்கியமும் சிறப்படை கின்றது. சிறுகதை, நாவல், நாடகம் முதலியவற்றில் மனுேபாவத்தையும் அதன் பல வேறு கூறுபாடுகளையும் நுணுகி நுணுகி ஆராய்ந்து விரித்துச் சொல்லும் அமைப்பையே அறிஞர் விரும்புகின்றனர். காப்பியத் திலும் உளவியலைச் சித்திரித்தக் காட்டும் பகுதிகள் தலைமை பெற்றிக்க வேண்டும்.

பழைய கதையையும் பழைய உவமைகளையும் பழைய அணிகளையும் விட்டுவிடுவதஞல் குறையொன்றும் இல்லை. அந்தப் பழமையின் விளைவாக உண்டான நூல்கள் அளவிறந்தன, தமிழில் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான புராணங்கள் செவ்விய நடையும் அணியமைதியும் பொருந்தியிருப்பினும் தேடுவாரற்று மூலையிலே கிடக்கின்றன. அவ்வத்தலத்தைக் கைலாயத் தோடும் வைகுந்தத்தோடும் ஒரு நிகர்த்ததாகத் தூக்கி வைத்துப் பேசிக் கட்டுக்கதைகளைக் கோத்து அமைத்த அவற்றின் பொருளமைதியை இக்காலத்தில் விரும்புவார் இல்லை. ஊர் அபிமானமும், சமய அபிமானமும் கவிஞர் களுடைய பரந்த நோக்கத்தைச் சிறைப்படுத்தி விட்ட மையால் அவர்கள் வாக்கிலே அமைந்த நயங்களும் பிறர் கண்ணிற் படாமற் போயின.

புதுக் காப்பியங்கள் இயற்றுவார், புராணங்கள் வழக் கொழிந்தமையையும் வழக்கொழிந்து வருவதையும் பார்க்க வேண்டும். இப்பொழுது வழங்கி வரும் சில காப்பியங்களும், புராணங்களும் இன்னும் சில காலத்தில்