பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையும் புதுமையும் 271

மற்றவற்றைப் போலவே வழக்கொழிந்துவிடும் என்ப திற் சிறிதும் ஐயம் இல்லை. ஆதலின் காலம் பழமை யடைந்தாலும் நூல் புதுமை அழகோடு விளங்கும்படி காப்பியம் அமையவேண்டும். சிலப்பதிகாரமும் கம்ப ராமாயணமும் கால வெள்ளத்திலே அமிழா. எப்பொழு தும் அவை மேலே மிதந்துகொண்டே இருக்கும்.

நாகரிக விரிவினல் மனிதனுடைய கருத்துக்களும் சுவையுணர்ச்சியும் கற்பசைக்தியும் விரிந்திருக்கின்றன ஆதலின் புதுக் கவிதை இயற்றுவாருக்குப் பொருட் பஞ்சம் இல்லை. -

“இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

சொல்வதிலோர் மகிமை இல்ல'

என்று முரசறையும் புதுமைக் கவியின் உபதேசத்தை நாம் உணர்ந்து புதுக்காப்பியங்களை அமைக்கவேண்டும்; பழமை மரபும் ஏற்புழித் தழுவ வேண்டும்.

புதுமையாகக் காப்பியம் எழுதினுல் சில அடிப் படையான மரபுகளை மாற்ற இயலாது. இந்த நாட்டுக்கே உரிய பண்பாட்டுக்கு மாறுபாடாக ஒரு காப்பியம் அமைந்தால் அது சான்ருேர்களின் பழிப்புக்கு உரியதாகி விடும். கலை கலைக்காகவே என்று சொல்லும் நாடு அன்று இது. காவியமானலும் ஓவியமானலும் இன்பம் தந்து அதன் வாயிலாக வாழ்க்கையை உணர்த்தவேண்டும். மனிதனைப் பண்பாடு என்னும் குன்றில் ஏறி நிற்க வகை செய்யவேண்டும். அந்த வகையில் பண்பாட்டுக்கு ஏற்ற மரபைத் தெரிந்துகொண்டு புதிய கவிஞன் பாட வேண்டும். அப்படியே தமிழ்மொழிக்குரிய அடிப்படை